ETV Bharat / state

குளிர் பதன கிடங்குகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் - வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி! - வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர் சந்திப்பு

சென்னை: காலியாக உள்ள அரசு குளிர் பதன கிடங்குகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Agriculture Gagandeep Singh Bedi press meet

author img

By

Published : Apr 13, 2020, 8:59 PM IST

இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"விவசாயப் பணிகளுக்கு எந்தவித தடையும் இல்லை. கோடை சாகுபடியில் நெல், பருப்பு வகைகள், எள் சாகுடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். விவசாயப் பணி தடையின்றி நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறுவடை இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் கடைகளைக்கூட திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் போதிய உரம் கையிருப்பில் உள்ளது. தேவையான அளவுக்கு விதைகள் கைவசம் உள்ளன. விவசாயப் பணிகள் செய்ய எந்த தடையும் இல்லை. சமூக இடைவெளியைக் கடைபிடித்து விவசாயிகள் தங்கள் பணியைத் தொடரலாம்.

தங்களது வேலையைத் தொடர தடை இருந்தால் மாவட்ட உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். சேதமடைவதற்கு முன் காய்கள், பழங்களை கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு அரசின் குளிர் பதன கிடங்குகளில் விவசாயிகள் தங்களது பொருள்களை இலவசமாக சேமித்துக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் 138 குளிர் பதன கிங்குகளில், வெறும் 33 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதேபோல் அரசின் சேமிப்பு கிடங்களை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்த வேண்டும். தற்போது விவசாயப் பொருள்களை கொள்முதல் செய்வது தொடர்பாக, நாங்கள் மொத்த வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

காய்கறி, பழங்களுக்குத் தட்டுப்பாடு ஏதும் ஏற்படாத சூழலில் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் இருந்தும் பொருள்களை வாங்க முயற்சித்து வருகிறோம். பண்டிகைகள் இல்லாததால் பூக்கள் வீணாகிறது. இதற்காக ஸ்சென்ட் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மளிகைப் பொருள்கள் உரிய வகையில் கிடைக்க விற்பனை செய்யும் பெரு நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்” என்றார்.

இதையும் படிங்க:தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீடிப்பு - முதலமைச்சர் பழனிசாமி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.