ETV Bharat / state

பாஜவுக்கு மாற்று காங்கிரஸ் மட்டும்தான் - திமுகவுடனான தொகுதி ஒப்பந்தத்துக்கு குறித்து கே.எஸ் அழகிரி பேச்சு

K.S. Alagiri
கே.எஸ். அழகிரி
author img

By

Published : Mar 7, 2021, 10:03 AM IST

Updated : Mar 7, 2021, 4:08 PM IST

09:57 March 07

காமராஜர் ஆட்சி அமைய வேண்டும். ஆனால் பாஜகவை வீழ்த்துவதே தற்போதைய தேவை எனவும் அந்தக் கட்சிக்கு மாற்று காங்கிரஸ் மட்டும்தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுகவுடனான தொகுதி ஒப்பந்தத்துக்கு குறித்து கே.எஸ் அழகிரி பேச்சு

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இருகட்சிகளின் தலைவர் முன்னிலையும் இன்று (மார்ச் 7) கையெழுத்தாகின. நீண்ட இழுபறிக்கு பிறகும், மூன்று கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதியாக கையெழுத்தாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டு உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி, “எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் திருப்தியாக உள்ளது. அரசியல் என்றால் ஏற்றம், இறக்கம் இருக்கதான் செய்யும்” என்றார். 

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறைந்துகொண்டே வருவது பற்றி கேள்வி கேட்டபோது, “நாளை காங்கிரஸ் 200 இடங்களில் கூட போட்டியிடலாம் என்று பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ்தான். நாங்கள் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம். ஆனால் முதலில் அதற்கு பாஜகவை வீழ்த்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசும்போது, “திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து இதற்கு மேல் எதுவும் நாங்கள் தெரிவிக்க விரும்பவில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம்' என்ற தலைப்பில் அமித் ஷா பரப்புரை!

Last Updated : Mar 7, 2021, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.