ETV Bharat / state

அக்னிபாத் எதிர்ப்பு: சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு - agnipath protest in tamilnadu

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அக்னிபாத் எதிர்ப்பு: சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

author img

By

Published : Jun 18, 2022, 1:54 PM IST

சென்னை: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ராணுவத்தில் சேர்வதை கனவாகக் கொண்ட இளைஞர்கள் நாடு முழுவதும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிகாரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அதேநேரம், நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ரயில்கள் தீ வைக்கப்பட்டன. இதனால், நேற்றைய தினம் 200 ரயில் சேவைகளை முடக்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதை முன்னிறுத்தி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக சென்னைக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்களை தீவிரமாக கண்காணிக்க சென்னை காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், பிறமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு போராட்டம் நடத்தும் எண்ணத்துடன் வரும் இளைஞர்களை தடுப்பதற்கு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இன்று (ஜூன் 18) காலை தலைமைச் செயலகம் அருகே திடீரென ஒன்று கூடிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய காவல்துறையினர், போர் நினைவு சின்னம் அருகே அழைத்து வந்தனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபடத் தயாரான இளைஞர்கள் அனைவரையும் கைது செய்த காவல்துறையினர், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அக்னிபாத் வீரர்களுக்கு துணை ராணுவத்தில் 10% ஒதுக்கீடு - உள்துறை அமைச்சர் அமித் ஷா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.