சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் அம்மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக சென்னை பெருநகரமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளானது. மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், புயலால் பெய்த கனமழையால், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக கேளம்பாக்கம் சாலையில் தேங்கி இருந்த மழை நீர் வண்டலூர் பூங்காவிற்குள் சென்றது. இதனால் பூங்கா முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும், பூங்காவில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 4 நாட்களாக வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. பணியகள் முடிவடைந்த நிலையில், இன்று (டிச. 8) உயிரியல் பூங்கா மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் சிக்கிய இருவரின் உடல் மீட்பு.. மேலாளர், மேற்பார்வையாளர் இருவர் கைது!