ETV Bharat / state

பைக் டூர் முடித்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்.. விரைவில் விடாமுயற்சி படபிடிப்பு! - Magizh Thirumeni

Ajith Kumar Bike Tour: பைக் டூர் முடித்துவிட்டு நடிகர் அஜித், துபாய் வழியாக சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

நடிகர் அஜித் குமார்
actor ajith kumar
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 12:11 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். ரசிகர் மன்றங்களை கலைத்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் படம் வெளியாகும் நாளே அவரது ரசிகர்களுக்கு திருவிழா தான். பொது நிகழ்ச்சிகளில் இவரை பார்க்கவே முடியாது எனவே இவர் படங்களில் மட்டுமே இவரை காண முடியும். இதனால் இவரது ரசிகர்கள் படம் வெளியாகும் அன்று திரையரங்குகளில் திரண்டு திருவிழாவாக கொண்டாடி மகிழ்வர்.

விரைவில் விடாமுயற்சி படபிடிப்பு

சமீபத்தில் அஜித் நடித்து வெளியான படம் துணிவு. எச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியாகி வெற்றியை பெற்றது. இந்த ஆண்டு வெளியாகி அதிக வசூல் செய்த படமாகவும் துணிவு அமைந்தது. இந்த சாதனையை ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் தற்போது முறியடித்து உள்ளது.

இதையும் படிங்க: சென்னை உலக சினிமா விழா.. மூன்று நாள் விழாவில் 15 படங்கள் திரையிடத் திட்டம்!

அஜித் நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸில் ஆர்வம் கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நாடு நாடாக சென்று பைக் பயணம் செய்து வருவார். துணிவு படத்திற்கு பிறகு உலகம் சுற்றும் பைக் பயணம் மேற்கொண்டார். இதனிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் பல்வேறு பிரச்சினைகளால் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இப்படத்திற்கு "விடாமுயற்சி" என பெயரிடப்பட்டது. ஆனால் அறிவிப்பு வந்து பல மாதங்கள் ஆகியும் இதுகுறித்து அடுத்த கட்ட அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஒரு கட்டத்தில் படம் கைவிடப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் படம் திட்டமிட்டபடி அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் அஜித் டென்மார்க், நார்வே, ஜெர்மனி போன்ற நாடுகளில் பைக் டூர் சென்று வந்தார். இதனால் வலிமை படத்திற்கு போன்றே விடாமுயற்சி படத்துக்கும் ரசிகர்கள் அப்டேட் கேட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பைக் டூர் முடிந்து துபாய் வழியாக நடிகர் அஜித் நேற்று (ஆகஸ்ட் 23) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவரிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்டனர். அவர்களிடம் இருந்து தப்பித்து பத்திரமாக காரில் ஏறி சென்றுவிட்டார் நடிகர் அஜித்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வந்த நடிகர் அஜித்தின் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கோடிகளில் வசூல் செய்யும் படங்கள் சமூகத்தை சீரழிக்கக் கூடியவை - தங்கர் பச்சான் சர்ச்சை பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.