ETV Bharat / state

குரோம்பேட்டை போத்தீஸ் ஊழியர்கள் 13 பேருக்கு கரோனா - குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகால் மூடல்

சென்னை அடுத்துள்ள குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகால் ஊழியர்கள் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்பேரில் கடை மூடப்பட்டது.

குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகால்
குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகால்
author img

By

Published : Jan 8, 2022, 4:27 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா, ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சுகாதாரத் துறை சார்பாக, மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு, பெரிய ஜவுளிக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.

அந்தவகையில் நேற்று (ஜனவரி 7) குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் ஜவுளிக் கடையில் 22 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகாலில் 240 ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இன்று (ஜனவரி 8) 13 ஊழியர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிக்கப்பட்ட நபர்களை போத்தீஸ் கடைக்குச் சொந்தமான விடுதியில் தங்கவைக்கப்பட்டு மருத்துவக் குழுவினர் கண்காணித்துவருகின்றனர்.

குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகால்
குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகால்

கரோனா உறுதிசெய்யப்பட்ட சரவணா ஸ்டோர், போத்தீஸ் கடை ஊழியர்கள் பெரும்பாலானோருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பதாகச் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்பேரில் போத்தீஸ் ஸ்வர்ணமகால் கடை மூடப்பட்டுள்ளது. கடை முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

முன்னதாக கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்தவக் கல்லூரி மாணவர்கள் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 30 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் அவசர அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.