சென்னை ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன். இவருக்கும் ஜெயா என்றப் பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில் இவர் வியாசர்பாடியைச் சேர்ந்த ஆஷா என்ற பெண் தோழியுடன், திருமணத்தை மீறிய உறவு வைத்துள்ளார்.
இதனால் வெங்கடேசன் - ஜெயா இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுள்ளனர். கடந்த ஆறு மாத காலமாக வெங்கடேசன் ஆஷாவுடன் திருமுல்லைவாயிலில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் தீக்குளி்த்தாக காவல் துறைக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் ஆஷாவிடம் விசாரி்த்த போது, வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததாக நாடகமாடியுள்ளார்.
பின்னர் ஆஷா தன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் பேரில் காவல்துறையினர் ஆஷாவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: