உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளுக்கு கூடுதலாக குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தக் குழுக்களைச் சேர்ந்த அலுவலர்களுடன் இன்று கரோனா வைரஸ் நோய் தடுப்பு கண்காணிப்புக் குழு அலுவலர்கள் ராஜேந்திரகுமார், கார்த்திகேயன், அபாஷ்குமார் ஆகியோர் ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடத்தினர். அதில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கரோனா கூடுதல் சிறப்புக் குழு அலுவலர் பாஸ்கரன், மீன்வளத்துறை இயக்குநர் சமீரன், இணை ஆணையாளர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தடைசெய்யப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் உணவு வழங்கத் தடை