சென்னை: இது குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், ”அரசு ஊழியர்களுக்கு வாகனங்கள் வாங்க தமிழ்நாடு அரசு முன்பணம், கடன் வழங்கி வருகிறது. அதில் கார், இரு சக்கர வாகனங்களை அரசு ஊழியர்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் வாகனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய மாடல்கள் தினம் தினம் சந்தைக்கு வருகிறது.
மின்சார வாகனங்கள் வாங்க அரசு அனுமதி வழங்க அரசு ஊழியர்கள் அனுமதி கோரியிருந்தனர். மேலும் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் CO2 உமிழ்வைக் குறைத்து, புவி வெப்பமடைவதைக் குறைக்கிறது என்று போக்குவரத்து ஆணையர் முன்பு கூறியதன் அடிப்படையில், மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு முன்பணம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே அரசு ஊழியர்களுக்கு மோட்டார் போக்குவரத்து முன்பணத்தை அனுமதிக்கும் நோக்கத்திற்காக மின்சார வாகனங்கள் (இ-வாகனங்கள்) வாங்க அரசு ஊழியர்களுக்கு முன்பணமும், கடனும் வழங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ், அலுவலர்களுக்கு 14 லட்சம் ரூபாய், TNPSC குரூப் 1 அலுவலர்களுக்கு 10 லட்சம் ரூபாய், அரசு உயர் பதவிகள் வகிக்கும் அலுவலர்களுக்கு 6 லட்சம் ரூபாயும், சொந்தமாக வாகனங்கள் வாங்க முன்பணம் கடன், வழங்கப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறையில் உள்ள குறைகளை சரி செய்ய கோரிக்கை!