ETV Bharat / state

‘உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயார்’ - அமைச்சர் பாண்டியராஜன்!

சென்னை: உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளதால், மற்ற கட்சிகள் குறித்து கவலைப்பட விரும்பவில்லை என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ADMK will phase the local body election -Minister Pandiyarajan
ADMK will phase the local body election -Minister Pandiyarajan
author img

By

Published : Dec 5, 2019, 12:25 PM IST

ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர், திருநின்றவூர், பட்டாபிராம், திருமுல்லைவாயில், அம்பத்தூர், சூரப்பட்டு பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க நாளை கிருஷ்ணகிரி செல்கின்றனர். இதனால் மாணவிகள் இன்று ஆவடி சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வந்து அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் மாணவிகளுடன் விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்றால் கிடைக்கக்கூடிய அரசுப் பணி குறித்தும், மத்திய அரசு வழங்கக்கூடிய விளையாட்டு துறைக்கான நிதி குறித்தும் அறிவுரை வழங்கினார். மேலும், மாணவிகளுக்கு தேவையான 30 ஆயிரம் ரூபாய் உபகரணங்களை வழங்கினார்.

அமைச்சர் பாண்டியராஜன்!

இதனையடுத்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயார் என்றும் மற்ற கட்சிகளை குறித்து கவலைப்பட விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க... 'மதுரையின் முகவரிகள்' - பொக்கிஷங்களை நினைவுகூறும் 'சீனுராமசாமி'

Intro:உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார் ,மற்ற கட்சிகளை பற்றி கவலைப்பட நான் விரும்பவில்லை என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.Body:ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர், திருநின்றவூர் பட்டாபிராம், திருமுல்லைவாயில், அம்பத்தூர்,சூரப்பட்டு பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த 20கும் மேற்பட்ட மாணவிகள் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க நாளை கிருஷ்ணகிரி செல்கின்றனர்.இதனால் இன்று ஆவடி சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்து மாணவிகள் அமைச்சர் பாண்டியராஜன் அவர்களை சந்தித்தனர்.அப்போது அமைச்சர் மாணவிகளுடன் விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்றால் கிடைக்கக்கூடிய அரசுப் பணி குறித்தும் மத்திய அரசு வழங்கக்கூடிய விளையாட்டு துறைக்கான நிதி குறித்தும் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனையடுத்து மாணவிகளுக்கு தேவையான 30 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை திஷா ஸ்போர்ட்ஸ் அகாடெமி மூலமாக அமைச்சர் பாண்டியராஜன் வழங்கி ஊக்குவித்தார். இதனைப் பெற்றுக் கொண்ட மாணவிகள் அமைச்சர் உபகரணங்களை வழங்கியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும்,மேலும் விளையாட்டு துறையில் சாதித்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்போம் எனவும் உறுதி அளித்து அனைவரிடத்திலும் வாழ்த்து பெற்று சென்றனர்.பின்னர் நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார்,மற்ற கட்சிகளை பற்றி கவலைப்பட நான் விரும்பவில்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.