ETV Bharat / state

சலசலப்பு இடம் கொடுக்காமல் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் - கட்சியினருக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் அறிவுரை! - ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை

ADMK statement after meeting with ministers
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
author img

By

Published : Aug 15, 2020, 4:08 PM IST

Updated : Aug 15, 2020, 7:53 PM IST

16:06 August 15

சென்னை: சலசலப்புகளுக்கு இடம் கொடுக்காமல் நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஒன்றிணைந்து உழைத்திட வேண்டும் என்று கட்சி உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் அறிவுரை வழங்கியுள்ளனர்.

அதிமுக அமைச்சர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் - இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மகத்தான மக்கள் இயக்கத்தின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். இந்த இனிய நாள் நம் முன்னோர்களின் தியாகத்தாலும் , உழைப்பாலும் , தன்னலமற்ற தொண்டினாலும் மலர்ந்த பொன்னாளாகும். 

நாம் அனைவரும் ஒருதாய் மக்கள். "எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு" என்ற ஜனநாயகக் கொள்கையை நமக்கு வழங்கிய நாள் இந்த நாள். நம் நாடு பெற்ற சுதந்திரமும், அரசியல் சாசனம் தந்த மக்களாட்சித் தத்துவமும் ஏழை, எளிய, உழைக்கும் மக்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.  

ஒரு குடும்பத்தின் பிடியிலோ, ஒரு குறிப்பிட்ட குழுவின் கைகளிலோ, வலிமை பெற்றவர்களின் கரங்களிலோ இந்த மக்களாட்சி முடங்கிவிடக்கூடாது என்பதற்காக, எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கம். எம்.ஜி.ஆர் . தமிழ் மக்கள் மீது கொண்ட பேர் அன்பினாலும், தமிழ்நாடு மக்கள் எம்.ஜி.ஆர். மீது கொண்ட பாசத்தினாலும், நம்பிக்கையினாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது .

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 35 ஆண்டுகள் தனது உழைப்பையும், அறிவையும் இந்த இயக்கத்துக்காக வழங்கி, கழகத்தை ஒப்பற்ற அரசியல் இயக்கமாக வளர்த்ததோடு , நம்மையெல்லாம் ஆளாக்கி, நம் கைகளில் தமிழ்நாடு அரசின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றிருக்கிறார். என்னுடைய காலத்துக்குப் பிறகும் நூறு ஆண்டுகள் கழகம் ஆட்சியில் அமர்ந்து ஏழை, எளிய மக்களுக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும், மகளிருக்காகவும் உழைத்துக்கொண்டே இருக்கும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவர் சூளுரைத்தார்.

இத்தனை பாரம்பரியம் மிக்க நம்முடைய இயக்கம், கழகத்தின் உறுப்பினர்களாகிய உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பாலும் உயர்ந்து கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு இன்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதை அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர். நாம் தமிழ்நாடு மக்களுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அதை நோக்கிய பயணத்தில் அனைவரும் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.  

கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், கழக ஆட்சியையும் மாற்றாரும் பாராட்டும் வண்ணம் வழிநடத்தினோமோ, அதைப் போலவே இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி, மீண்டும் ஒரு தொடர் வெற்றியைப் பெற நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது.  

கடந்த சில நாள்களாக கழக நிர்வாகிகளில் சிலர் எந்தப் பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துகள் மாற்றாருக்கு பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டன. அத்தகைய நிலை மீண்டும் ஏற்பட்டுவிடா வண்ணம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப்போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.  

கட்சியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும், ஜெயலலிதா காட்டிய வழியில் ஜனநாயக ரீதியில் கழகத்தின் தலைமை விரிவாக ஆலோசித்து, கழகத் தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.  

எனவே, சிறு சலசலப்புகளுக்கும் இடம் தராமல், நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பளிக்காமல், ஒன்றுபட்டு உழைத்திட உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழக உடன்பிறப்புகள் மக்கள் பணிகளிலும், கழகப் பணிகளிலும் மட்டுமே கவனம் செலுத்துங்கள். கழகத்தை வெற்றிச் சிகரத்துக்கு இட்டுச்செல்ல உங்கள் பணிகள் மிகவும் இன்றியமையாதவை.

அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கழகத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்துப் பரிமாற்றங்களை செய்வதன்மூலம் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை. எனவே, விவாதங்களில் கழக அரசின் சாதனைகளைப் பற்றியும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, கழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள்.  

இவ்வாறு அந்த அறிக்கையில் இருவரும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் 'நிரந்தர முதலமைச்சர், மக்களின் முதலமைச்சர் ஓபிஎஸ்' என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டி அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டனர்.

முன்னதாக, அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, கட்சியின் முக்கிய உறுப்பினரான கே. சி. பழனிசாமி ஆகியோரும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக வெவ்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் இடையே எழுந்த கருத்து மோததலால், அதிமுகவில் சலசலப்பு உருவாகியது. இதைத்தொடர்ந்து, அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டனர். 

இவ்விவகாரம் தொடர்பாக, ஆலோசனைக்குப் பின்னர் இருவரும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டு, சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் ஓபிஎஸ் என்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி கிழிப்பு!

Last Updated : Aug 15, 2020, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.