சென்னை : தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 510 இடங்களில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் படிவம் ஏ, படிவம் பி கையெழுத்திட வேண்டும். ஆனால் இதற்கு ஓபிஎஸ் தரப்பினர் கையெழுத்திட முன்வந்து நிலையில் ஈபிஎஸ் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுக வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாகவும் இன்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஈபிஎஸ் தரப்பினர் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டும் தான் நிறைவேற்ற வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ஏனென்றால் அந்த தீர்ப்பை அடிப்படையாக வைத்து ஜூலை 11ஆம் தேதி நடைபெறக்கூடிய பொதுக் குழுவில் இதே போன்ற தீர்ப்பு அமல்படுத்தப்படலாம் என அதை ரத்து செய்யகூறி உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர்.
மேலும் பல விவகாரங்கள் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.
ஈபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன் மற்றும் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 1,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி