நடைபெற்று முடிந்த மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அதிமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்லவமும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, நடந்து முடிந்த தேர்தலில் பலகோடி வாக்காளர்கள் தங்களது பொன்னான வாக்குகளை வழங்கியுள்ளனர். குறிப்பாக சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பினை தந்துள்ளனர். அதேபோல் மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுகவை வெற்றிபெறச் செய்துள்ளனர்.
வாக்காளப் பெருமக்கள் கழகத்திற்கு துரோகம் செய்தவர்களை புறம்தள்ளி உண்மையான மக்கள் இயக்கம் அதிமுகதான் என நிரூபித்துள்ளனர். எனவே, ஜூன் முதல் தமிழ்நாடு முழுவதும் வாக்களார்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்களை நடத்த வேண்டியது கழகத்தினரின் இன்றியமையாத பணியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.