ETV Bharat / state

திமுக எம்எல்ஏ கார் கண்ணாடி உடைப்பு: அதிமுக பிரமுகர் கைது

author img

By

Published : Feb 21, 2022, 4:56 PM IST

ஆர்.கே. நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார் கண்ணாடி உடைந்த சம்பவத்தில் அதிமுக பிரமுகரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

திமுக எம்எல்ஏ கார் கண்ணாடி உடைப்பு
திமுக எம்எல்ஏ கார் கண்ணாடி உடைப்பு

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதிக்குள்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சவுந்திரபாண்டியன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசர் காரில் அங்கு சென்றார். அப்போது அதிமுகவினருக்கும், எபினேசரது ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

அப்போது, எபினேசரின் கார் கண்ணாடியைச் சிலர் உடைத்துவிட்டுத் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக எபினேசரின் கார் ஓட்டுநர் வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தூண்டுதலின்பேரில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளான 147 - கலகத்தில் ஈடுபடுதல், 148 - பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல், 341 - சிறை வைத்தல், 506 (2) - கொலை மிரட்டல், பொது சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சக்திவேல் என்பவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். விசாரணைக்குப் பிறகு சக்திவேலை ஜார்ஜ்டவுன் 15ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி வருகிற 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மற்றவர்களைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: விசிக, ஆதித்தமிழர் பேரவை கொடிகள் சேதம் - காவல் துறையினர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.