அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வமும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் கூட்டாகச் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “தமிழ்நாடு மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையும் நிவாரணமும் அளிப்பதற்கும், அதிமுக அரசு இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறது. இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு நோய்த்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கென முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இயற்கை பேரிடர் ஏற்பட்ட நேரங்களில் எல்லாம் மக்களின் தேவைகளை அறிந்தும், தற்போது நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும் ஊரடங்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில் மக்களுக்கு உரிய பணிகளை ஆற்றவும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை - முதலமைச்சர் அறிவிப்பு!