ETV Bharat / state

அதிமுகவின் மதுரை மாநாடு - சென்னையில் தீபஜோதி ஓட்டத்தை துவக்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி!

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கான தீப ஜோதி ஓட்டத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.

admk-madurai-maanadu-deepa-jothi-starting-chennai
அதிமுக மாநாட்டிற்காக தீபஜோதி ஓட்டம் செனையில் தொடக்கம்
author img

By

Published : Aug 14, 2023, 1:14 PM IST

சென்னை: மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான தீப ஜோதி ஓட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார். வருகின்ற 20ஆம் தேதி அதிமுகவின் மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரைக்கு அருகில் உள்ள வளைகுளம் என்ற பகுதியில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் மாநாட்டிற்கான பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற நாடளுமன்ற தேர்தலில் தங்களின் பலத்தை நிரூபிக்கும் விதமாக மதுரை மாநாடு அமைய வேண்டும் என்பதற்காக, 10க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனை நடத்தப்பட்டு, மாநாட்டிற்கான அழைப்புகளை வழங்கும் பணியில் அதிமுக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை திரட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

குறிப்பாக சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் காரணமாக தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு குறைந்துள்ளது என பேசப்பட்டது. இதனை உடைக்கும் விதமாகவும், தனக்கான செல்வாக்கை அதிகப்படுத்தும் விதமாகவும் மதுரையில் மாநாடு நடத்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டனர் என கூறப்படுகிறது. அதன்படி தொடர்ந்து மாநாட்டுப் பணி குறித்து ஆய்வுகளும், மாவட்ட செயலாளர் கூட்டம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 14ஆம் தேதி) அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டிற்கான தீப ஜோதியை தொடங்கி வைத்தார். இந்த தீப ஜோதியானது தொடர் ஓட்டத்தின் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அதிமுகவின் தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் தலைமையில் 51 பேர் கொண்ட இளைஞர் அணியினர் சென்னையில் இருந்து மதுரை நோக்கி செல்கின்றனர்.

இந்தத் தொடர் ஜோதி ஓட்டம் செங்கல்பட்டு, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், விராலிமலை, மதுரை பைபாஸ் வழியாக வருகின்ற 20ஆம் தேதி மதுரை மாநாட்டுத் திடலை சென்றடைந்து, தொடர் ஜோதி ஓட்டக் குழுவினர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜோதியை அளிப்பார்கள். இந்த ஜோதி மாநாட்டுத் திடலில் ஏற்றப்பட்டு மாநாடு தொடங்கி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஜெயலலிதாவுக்கு நடந்த கொடூரம்.. தமிழக சட்டமன்றத்தின் கருப்பு நாள்.. - எடப்பாடி பழனிசாமி காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.