ETV Bharat / state

ஆழ்துளைக் கிணறு விவகாரம்: அதிமுக அறிமுகப்படுத்திய செல்ஃபோன் ஆப்! - அதிமுக அறிமுகம் செய்த விசில் ரிப்போர்ட்டர் செயலி

சென்னை: ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து அதனை மழைநீர் சேகரிப்புக் கிணறுகளாக மாற்றுவதற்கு உதவும் வகையில் புதிய செயலியை அதிமுக தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கியுள்ளது

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட செயலி
author img

By

Published : Oct 30, 2019, 3:57 PM IST

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பயன்பாடற்று திறந்துகிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தோண்டப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளை, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

திறந்துகிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட, பல்வேறு அமைப்புகளும் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், அதிமுக தொழில்நுட்பப் பிரிவு (ஐடி விங்) விசில் ரிப்போர்ட்டர் (whistle reporter) எனும் புதிய செயலியை உருவாக்கியுள்ளது.

பயனற்றுக்கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற உதவும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலியை ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பிறகு பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறு உள்ள பகுதிக்குச் சென்று, இந்த செயலியில் உள்ள பச்சைநிற பொத்தானை அழுத்தினால் செயலியில் அந்தப் பகுதி கண்டறியப்பட்டு பதிவாகிவிடும். அதன்பிறகு அங்குள்ள ஆழ்துளைக் கிணற்றை, மழைநீர் சேமிப்புக் கிணறாக மாற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அறிமுகம் செய்த விசில் ரிப்போர்ட்டர் செயலி

இதுவரை, இந்தச் செயலியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தப்படாத 100க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து, செயல்படாத ஆழ்துளைக் கிணறுகள் இருக்கும் இடங்களைக் கண்டறிய உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பேருந்தில் செல்ஃபோன் திருடிய பெண் கைது..!

Intro:Body:ஆழ்துளை கிணறு மூட அதிமுக ரெடி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜித் விழுந்து உயிரிழந்தார். 4 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அவரது உடல் மட்டுமே மீட்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் சோக அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மேலும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தோண்டப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதேபோல பல அமைப்புகளும் ஆழ்துளை கிணறுகளை மூட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு (ஐடி விங்) தற்போது விசில் ரிப்போர்ட்டர் (whistle reporter) எனும் செயலியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பயன்பெறாத ஆழ்துளை கிணறு உள்ள பகுதிகளை கண்டறிந்து மழைநீர் சேகரிப்பு அமைப்பை மாற்ற நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஆழ்துளை கிணறு உள்ள பகுதிக்கு சென்று இந்த செயலில் உள்ள பச்சைநிற பொத்தானை அழுத்தினால் போதும். அதன்மூலம் பயன்பெறாத ஆழ்துளை கிணறு உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு மழைநீர் சேமிப்பு கிணறு ஆக மாற்றி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.