தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறயுள்ளது. இதனையொட்டி மாநிலத்தின் பிரதான கட்சிகள் மண்டல வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மண்டலப் பொறுப்பாளர்களில் சில மாற்றங்களை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அதிமுகவின் ஒருகிணைப்பாரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், கட்சியின் இணை ஒருகிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளையும், கட்சி பணிகளையும் விரைவுபடுத்தும் வகையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கீழ்க்கண்ட மாற்றம் செய்யப்படுகிறது.
மண்டலப் பொறுப்பாளர்: ஆர்.பி.உதயகுமார்,
ஒதுக்கப்படும் மாவட்டங்கள்: மதுரை புறநகர் மேற்கு, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி தெற்கு
மண்டலப் பொறுப்பாளர்: கடம்பூர். ராஜூ
ஒதுக்கப்படும் மாவட்டங்கள்: தென்காசி வடக்கு (கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி)
கட்சி உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடக்கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.