ETV Bharat / state

ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல்: கடிதத்தை மறுத்த அதிமுக... தேர்தல் ஆணையத்துக்கு பறந்த மெயில் - Chennai news

தேர்தல் ஆணையத்தின் கடித்ததை அதிமுக தலைமை அலுவலகம் வாங்க மறுத்த விவகாரத்தை மாநில தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான மோதல்
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான மோதல்
author img

By

Published : Jan 3, 2023, 3:27 PM IST

சென்னை: புலம்பெயர் தமிழர்கள் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக ரிமோட் வாக்குப்பதிவு முறையைக் கொண்டு வருவது தொடர்பாக ஜன.16ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மூலம் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த வகையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினரிடையே மோதல் போக்கை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், மாநிலத் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், "ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்" என குறிப்பிட்டிருந்தது.

அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் இருந்ததால் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அவர் திருப்பி அனுப்பினர். இதற்கு "அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டது என்பது மாநிலத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அல்ல. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின் அடிப்படையில் கடிதம் அனுப்பப்பட்டது" என மாநிலத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்திருந்தார்.

மீண்டும் தபால் மூலம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மாநிலத் தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் மாநிலத் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பியது.

இதனை அடுத்து, கடிதத்தை திருப்பி அனுப்பியது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் மாநிலத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரியப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை - டெல்லி இடையே கூடுதல் விமான சேவை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.