தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. விரைவில் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகிவருகின்றது. அதேபோல், அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராகிவருகின்றன.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று அதிமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நவம்பர் 24ஆம் தேதி சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கழக உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 15 நாள்களில் உள்ளாட்சி தேர்தல் - ஓ. பன்னீர்செல்வம்