மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்திவருகின்றது. இதற்கிடையில் திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஆகியோர் ஜெயலலிதா குறித்து, தேர்தல் விதிமுறைகளை மீறிப் பேசிவருவதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.
அதில், “திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஆகியோர் தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பரப்புரையில் பேசிவருகின்றனர்.
ஏற்கனவே, இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை அமைக்கப்பட்ட நிலையிலும் ஆணையத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிவருகின்றனர். மறைந்த தலைவர்கள் பற்றி பரப்புரையில் பேசுவதைத் தலைவர்கள் தவிர்க்க வேண்டுமென, சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.