ETV Bharat / state

'தமிழ்நாட்டைக் கூடிய விரைவில் கருணாநிதி நாடு என பெயர் மாற்றிவிடுவார்கள்' - ஜெயக்குமார் விமர்சனம் - கிழக்கு கடற்கரைச் சாலைக்கு பெயர் மாற்றி இருப்பதைப் பொதுமக்களே விரும்ப மாட்டார்கள்

கிழக்கு கடற்கரைச் சாலை என்பது அழகான பெயர், காஷ்மீரில் இருக்கக்கூடிய நபர்களைக் கேட்டால் கூட தெரியும், பரீட்சயமான சாலைக்கு பெயர் மாற்றி இருப்பதைப் பொதுமக்களே விரும்பமாட்டார்கள். கூடிய விரைவில் தமிழ்நாட்டைக் கருணாநிதி நாடு என மாற்றிவிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டை கூடிய விரைவில் கருணாநிதி நாடு என பெயர் மாற்றிவிடுவார்கள் - ஜெயக்குமார் விமர்சனம் admk-ex-minister-jayakumar-says-tamil-nadu-will-be-renamed-as-karunanidhi-nadu-soon

author img

By

Published : May 2, 2022, 3:28 PM IST

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆறாவது முறையாகக் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகிக் கையெழுத்திட்டார்.

கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், "கிழக்கு கடற்கரைச் சாலை என்பது அழகான பெயர். காஷ்மீரில் இருக்கக்கூடிய நபர்களைக் கேட்டால் கூட தெரியும், பரீட்சயமான சாலைக்கு பெயர் மாற்றி இருப்பதைப் பொதுமக்களே விரும்பமாட்டார்கள். கூடிய விரைவில் தமிழ்நாட்டைக் கருணாநிதி நாடு என மாற்றிவிடுவார்கள்" என அவர் விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'ஓபிஎஸ்ஸின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப் ஆன்மிக அடிப்படையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், அரசியல் தொடர்பு இல்லை என அவரே மறுத்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் வந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்திருப்பதாக’ அவர் கூறினார்.

நடிகை சித்ரா தற்கொலை வழக்கும் ஜெயக்குமார் ரியாக்‌ஷனும்: நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அதிமுகவினருக்குத் தொடர்பிருப்பதாக எழுப்பிய கேள்விக்கு, 'உரிய விசாரணை நடத்தி யாராக இருந்தாலும் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் கூறினார். 'நிழல் முதலமைச்சராக மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் இருந்து வருகின்றனர்.

மேலும், உதயநிதிக்குப் பெரிய பதவியை வழங்குவதற்காக அவரை முன்னிலைப்படுத்தும் முன்னேற்பாடுகளை திமுகவினர் செய்துவருகின்றனர். திமுக அமைச்சர்களிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது. ஜமீன்தார் அரசியல் நடத்தி வருவகின்றனர்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு சட்டம் ஒழுங்கு பிரச்னை, விலைவாசி உயர்வு எனப் பொதுமக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதன் வெளிப்பாடு இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருமொழி கொள்கை தான். மும்மொழிக் கொள்கையை மறைமுகமாக திமுக ஆதரித்து வருகிறது. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பச்சோந்தி போல கொள்கையை திமுக மாற்றி வருகிறது.

மாணவர்கள் மோதல், ஆசிரியர்கள் மிரட்டப்படுதல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து இருக்கிறது. ஆரம்பத்திலேயே பள்ளிக்கல்வித்துறை தடுத்திருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்காது. இலங்கைத் தமிழர்கள் 1.5 லட்சம் பேர் படுகொலைக்குக் காரணமான திமுக அரசு தற்போது நிவாரணப்பொருட்கள் அனுப்பி வேஷமிடுகிறது. அதை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்" எனவும் ஜெயக்குமார் கூறினார்.

இதையும் படிங்க: 'திறத்தல், போஸ் கொடுத்தல், ரிப்பீட்டு' - முதலமைச்சரை கலாய்த்த ஜெயக்குமார்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.