ETV Bharat / state

எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்க உத்தரவு - காட்பாடி

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு

author img

By

Published : Jul 26, 2021, 12:40 PM IST

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் அமைச்சர் துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விராலிமலை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் (23,644 வாக்குகள் வித்தியாசம்) தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் ஆகியவை விநியோகித்து விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாகவும், எனவே அவர் வெற்றிய செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்தத தொகையைவிட அதிகமாக செலவு செய்துள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காட்பாடி

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வி.ராமு (745 வாக்குகள் வித்தியாசம்) தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், தகுதியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டது, தேர்தல் நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன், தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

பெருந்துறை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து, திமுக சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி.பாலு (14,507 வாக்குகள் வித்தியாசம்) தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், மின்னணு வாக்குப்பதிவில் குறைபாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டியும், அவற்றை நிவர்த்தி செய்யாமல் தேர்தல் நடத்தப்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கையிலும் குளறுபடி இருந்ததாகவும்,மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த வழக்குகள் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - ஆன்லைன் விண்ணப்பம் நடைமுறை தொடங்கியது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.