தமிழ்நாட்டில் காலியாகயுள்ள இரண்டு சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறயுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடங்கிய ஆட்சிமன்றக் குழுவானது நேர்காணல் நடத்தியது.
இந்நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் பார்க்க: மாணிக்கம் தாகூர் பற்றிய சர்ச்சை பேச்சு; ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய கோரிக்கை