இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக சார்பில் ஊடக விவதாங்களில் பங்குபெற 17 பேர் கொண்ட செய்தி தொடர்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் அதிமுக பிரதிநிதி என்று வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் பங்கேற்றுள்ளார்.
ஆனால், அவர் அதிமுகவில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டார். இதற்கு அதிமுக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. செய்தி தொடர்பாளர்கள் என்று அதிமுக சார்பில் அங்கீகரிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு எவரையும் அதிமுக பிரதிநிதிகள் என்று அடையாளப்படுத்த வேண்டாம்.
அப்படிச் செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஏற்கனவே கூறப்பட்டுள்ள 17 பேரை மட்டும் ஊடக விவாதங்களுக்கு அழைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 'இப்படியே போனால் தமிழ்நாடு இந்தியாவில் இருக்காது ' - வைகோ சூளுரை!