ETV Bharat / state

9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை

author img

By

Published : Jun 30, 2021, 1:01 PM IST

9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை
9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், "2021-2022 ஆம் கல்வியாண்டில் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணைய தளம் மூலம் மேற்கொள்ள அனுமதி வழங்கியது.

தொழில்நுட்ப கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளில் (Diploma courses) சேர 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி, மதிப்பெண் அடிப்படையில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை செய்யப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

2

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்ப கல்வி இயக்கக அலுவலர்களுடன் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், 2020-21 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாததால், 9 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டயப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆகஸ்ட் முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.