ETV Bharat / state

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 28 முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

author img

By

Published : Dec 14, 2021, 8:19 AM IST

ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 28 முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

சென்னை: சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ்க்கண்ட சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

1) முதியோர் அறிவுத்திறன் மேம்பாடு மற்றும் தின பராமரிப்பு மையம் (Cognition rehabilitation and day care center)

2) ஆதரவற்ற மனநோயர் அவசர சிகிச்சை மற்றும் மீள் வாழ்வு மையம் (Emergency care and Rehabilitation center)

3) இளைஞர்களுக்கான இணையதள சார்பு நிலை மீள் வாழ்வு மையம் (Internet de-addiction centre)

4) பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தத்திற்கான சிறப்பு ஆலோசனை (Post natal depression Counselling)

5) பச்சிளங்குழந்தைகள் செவித்திறன் கண்டறிதல் (Newborn Hearing Special Screening)

இந்த சிறப்பு சிகிச்சை பிரிவுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவசர சிகிச்சை பிரிவு

அப்போது அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது, "மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவு ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 22 அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட உள்ளது. பிரத்யேக சிகிச்சை வழங்குவதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தத்திற்கான சிறப்பு ஆலோசனை மையம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 22 விழுக்காடு பெண்கள் பிரசவத்திற்கு பின்பு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக ஆலோசனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் 1000 குழந்தைகளில் 1.42 விழுக்காடு குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டிற்கு சிறப்பு பரிசோதனை செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 140 கோடி ரூபாயில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 1450 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது" என்றார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்த ஓபிஎஸ் அறிக்கைக்கு பதிலளித்த அவர், "கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் 1500 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று உள்ளது. உண்மை தன்மை தெரியாமலேயே ஓபிஎஸ் அறிக்கை வாயிலாக தவறான தகவல்களை தெரிவிக்கிறார்.

ஒமைக்ரான் பரவல் தமிழ்நாட்டில் இல்லை

ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 25 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமைக்ரான் பரவல் தொற்று தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்படவில்லை. ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 28 முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு - புத்தாண்டைக் கொண்டாட கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதியில்லை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.