ETV Bharat / state

எஸ்.சி, எஸ்.டி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் - Admission

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் எஸ்.சி, எஸ்.டி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Jun 11, 2019, 11:00 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின துறையின் கீழ் 22 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுதிகளில் தங்க மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த வருமான வரையறையின் கீழ் வரும் மாணவர்கள் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களுடன், மூன்று பாஸ்போர்ட் அளவு போட்டோ, குடும்ப அட்டை நகல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை இணைத்து சுய கையொப்பமிட்டு ஒப்படைக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் ஜூன் 26ஆம் தேதியும், கல்லூரி மாணவர்கள் ஜூலை 20ஆம் தேதிக்குள்ளும் விடுதி காப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சென்னையில் எஸ்.சி,எஸ்.டி. விடுதிகளில்
மாணவர்  சேர்க்கைக்கு  விண்ணப்பிக்கலாம்

 சென்னை,
சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 22 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில்     2019-2020  ம் கல்வியாண்டில் ஏற்படுகின்ற காலியிடங்களுக்கு புதியதாக  மாணவர் சேர்க்க பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களில் பயிலும்  எஸ்.சி, எஸ்.டி.இன மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரரின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2.50  லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவருக்கு  இருப்பிடம், உணவு வசதி செய்து தரப்படும்.
இந்த விடுதிகளில் சேர விரும்பும் மாணவர் அவரவர் பயிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளின் காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்து விடுதி சேர்க்கை விண்ணப்ப படிவத்தை பள்ளி விடுதிகளுக்கு பள்ளி திறக்கும் நாளிலிருந்தும், கல்லூரி விடுதிகளில் கல்லூரி திறக்கும் நாளிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
  விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் 3 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், தங்களது குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றில் சுய சான்றொப்பமிட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  மேலும் விவரங்களை 044-25225657 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
  பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் பள்ளி தலைமையாசிரியர்,கல்லூரி முதல்வரின் சான்றொப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் பள்ளி மாணவர்கள் வரும் 20.6.2019க்குள்ளும், கல்லூரி மாணவர்  வரும்  15.7.2019 க்குள்ளும் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர்  அ.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.