ETV Bharat / state

பிணை கோரிய மீரா மிதுனின் வழக்கு தள்ளிவைப்பு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் ஆகியோர் பிணை (ஜாமின்) கோரிய வழக்கை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணை கோரிய மீரா மிதுனின் வழக்கு தள்ளிவைப்பு

author img

By

Published : Aug 19, 2021, 2:11 PM IST

சென்னை: நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்தன.

இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 11ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் முன்னிலையாகும்படி மீரா மிதுனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

தயாரிப்பாளர்களுக்கு இழப்பு

விசாரணைக்கு முன்னிலையாகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், தன்னைப் பற்றி அவதூறாகச் செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது, வாய்த் தவறி பட்டியலின சமுதாயத்தைப் பற்றி பேசியதாகவும், பிறகு தான் பேசியது தவறு எனத் தெரிந்ததும், தான் பேசியது தவறு எனத் தான் குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

ஆனால், தான் சொல்லாத வார்த்தைகளைப் பேசியதாகப் புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் பிணை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

பிணை கோரிய வழக்கு தள்ளிவைப்பு

நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும், சாட்சிகளைக் கலைக்க மாட்டோம் எனவும் மனுவில் இருவரும் உத்தரவாதம் அளித்துள்ளனர். இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மீரா மிதுனுக்கும், அவரது ஆண் நண்பருக்கும் பிணை வழங்கக் கூடாது எனப் புகார்தாரரான விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: 'புல்லட் பண்டி'க்கு குத்தாட்டம் போட்ட மணமகள்... ஓவர்நைட்டில் ட்ரெண்டிங்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.