ETV Bharat / state

லெக்ராஞ்ச் புள்ளியை இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்?- ஆதித்யா எல்-1 என்றால் என்ன? முழு விபரமும் இங்கே! - details about adhitiya l1 mission

சந்திரயான்-3 சாதனையைத் தொடர்ந்து, இஸ்ரோ தன்னுடைய அடுத்த மைல்கல்லான சூரியனை ஆய்வு செய்வதற்கு, உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளது. இந்நிலையில் ஆதித்யா எல்-1 குறித்து, பால்வழி மண்டலத்தில் உள்ள எல்-1 பாயின்ட் பற்றியும், விஞ்ஞானியின் பதில்களுடன் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

adhitiya L1 mission
ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்த விளக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 8:10 AM IST

Updated : Sep 2, 2023, 10:56 AM IST

சென்னை: சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட் மூலம் செப்.2 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது என இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் இருக்கும் முக்கிய நட்சத்திரமாக சூரியன் பார்க்கப்படுகிறது. இந்த சூரியனை உலகத்தில் உள்ள சில நாடுகள் கடவுளாகவும் வழிபட்டு வருகின்றனர். விஞ்ஞானிகள் எப்போதும் சூரியன், சந்திரன், மற்றும் விண்வெளி, கோள்கள் என அனைத்ததையும் ஆராய்ந்து, அங்கு என்ன இருக்கிறது, எந்த வகை கணிமங்கள், தாதுக்கள் இருக்கிறது என்று பல வகை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலவை குறித்து உலகில் பல நாடுகள் ஆராய்ந்தாலும், சூரியனை பற்றி ஆய்வு செய்தது ஒரு சில நாடுகள் மட்டுமே ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தன. முதன் முதலாக 1960-ஆம் ஆண்டு முதல் 1969-ஆண்டு வரை சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கு நாசா முன்வந்தது. சூரியனை ஆராயும் அந்த திட்டத்திற்கு 'பயனியர் திட்டம்' (PIONEER MISSIONS) எனப் பெயரிடப்பட்டது.

இந்த திட்டத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா 6 ஆர்பிட்டர்களை அனுப்பியது. அதனை தொடர்ந்து ஜெர்மனியும் தன் ஆராய்ச்சியை, 'ஹீலியோஸ்' என்ற பெயரில் தொடங்கியது. அதன் பின்னர் ஐரோப்பிய வின்வெளி ஆராய்ச்சி மையம் இந்த ஆராய்ச்சியில் முனைந்தது. இதன் வரிசையில் தற்போது இந்தியா, தன் முதல் சூரிய பயணத்தை, ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தின் மூலம் தொடங்க உள்ளது.

இஸ்ரோவின் வளர்ச்சி: 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி அன்று, முதன் முதலில் இந்தியா தன் செயற்கைகோளான 'ஆரியபட்டாவை' விண்ணுக்கு அனுப்பியது. அதைத் தொடர்ந்து, பல செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியது. சந்திரன் குறித்த ஆராய்ச்சியில், சந்திரனை தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் என்ற திட்டத்தை கையில் எடுத்தது. 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட்15 ஆம் தேதி, இந்தியாவின் அப்போதையப் பிரதமர் வாஜ்பாய், சந்திரயான் திட்டத்தை முதன்முதலாக அறிவித்தார்.

அதன் பிறகு ஐந்து ஆண்டு கால ஆராய்ச்கிக்கு பிறகு, 2008 ஆம்ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதியன்று, சந்திரயான்-1 திட்டம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி சந்திரயான்-1 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து சந்திராயன்-2 திட்டம் தோல்வியில் முடிந்து இருந்தாலும், கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3, ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கி, உலகத்தின் பார்வையை இந்திய நாட்டின் மீது திருப்பியது. இந்தியா தனது நிலவு ஆராய்ச்சியை தொடர்ந்து, தற்போது சூரியனை ஆராய்ச்சி செய்ய ஆய்த்தமாக இறங்கி உள்ளது.

சந்திரன் டூ சூரியன்: இந்திய விண்வெளி ஆராய்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. லேண்டர் கலன், இறங்கிய இடத்தில் இருந்தபடியும், அதில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட ரோவர் வாகனம், ஊர்ந்து சென்றபடியும் நிலவில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, சூரியன் குறித்த ஆராய்ச்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், சூரியன் - பூமி இடையே ‘லெக்ராஞ்ச்’ எனப்படும் சமநிலை புள்ளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புள்ளிகளில் எல்-1 என்ற மையப் பகுதியில், ஆதித்யா எல்-1 நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

ஆதித்யா எல்-1: சூரியன் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 15 ஆண்டுகளாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதன் பலனாக, இஸ்ரோ சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 என்ற அதிநவீன செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும் முழுக்க முழுக்க 'மேக் இன் இந்தியா திட்டத்தின்' கீழ் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தில் இருக்கும் கருவிகள் சூரிய காந்த புயலின் தாக்கத்தையும், அதன் விளைவுகள் குறித்தும், சூரியனின் வெளிபுறத்தில் உள்ள கரோனா எனப்படும் இடத்தையும் ஆய்வு செய்யும். சூரியனை பற்றி ஆய்வு செய்ய உள்நாட்டு தொழில் நுட்பத்தில் ரூ.424 கோடியில், மொத்த எடையான 1,475 கிலோவிலும், செயற்கை கோள்களின் 244 கிலோ எடையிலும், ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது (லெக்ராஞ்ச் புள்ளி) எல்-1 பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

லெக்ராஞ்ச் புள்ளி என்றால் என்ன?: சூரிய குடும்பத்தில் ஒரு கிரகத்தின் சுற்றுப்பாதையைச் சுற்றி ஐந்து இடங்கள் உள்ளன. அதவாது, ஐந்து சமநிலை பகுதிகள் உள்ளன(சூரியனின் அதிகாமன ஈர்ப்பு விசை, கோளின் குறைந்தபட்ச ஈர்ப்பு விசையின் புள்ளிகள்). இந்த சமநிலை புள்ளிகளில் தான், ஆர்பிட்டர் சமநிலையில் நிற்கவும், மேலும், விண்கலம், பூமி, நிலவு, மற்ற கிரங்களை சீரான இடத்தில் நிற்கவும் வைத்துக் கொண்டு இருக்கிறது.

ஆகையால், இந்த சமநிலை புள்ளிகளில் இருந்து, ஆராய்ச்சி செய்வதற்கு எளிமையாக இருக்கும். 1772 ஆம் ஆண்டில் இத்தாலிய வானியலாளரும் கணிதவியலாளருமான ஜோசப்-லூயிஸ் லாக்ரேஞ்ச் பெயரால் பெயரிடப்பட்ட லாக்ராஞ்சியன் அல்லது எல்-1 புள்ளிகள் இவரின் பெயரால் அறியப்பட்டாலும், இதற்கு முன்னால், லியோனார்டு ஆய்லர் மூலம், நேர் கோட்டில் இருக்கும் 3- சமநிலைப் புள்ளி கண்டறியப்பட்ட நிலையில், அதனை சரியான முறையில் ஜோசப்-லூயிஸ் லாக்ரேஞ்ச் குறிப்பிட்டு இருந்தார்.

அதனால் அந்த சமநிலைக்கு லெக்ராஞ்ச் புள்ளி என்ற பெயரிட்டப்பட்டது. இதில் மொத்தம் 5 புள்ளிகள் உள்ளன. இதில் எல்-1 புள்ளி பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கு உள்ள இடைவெளியில் அது ஒரு சதவீதம் தான் என்பது குறிப்பிடதக்கது.

இது குறித்து சூரிய வான் ஆய்வக விஞ்ஞானி, எபிநேசர் செல்லச்சாமி கூறியதாவது, "தற்போது சூரியனை ஆய்வு செய்வது முக்கியமானது ஆகும். பூமிக்கு அருகில் இருக்கும், நட்சத்திரம் சூரியன் தான். மேலும், சூரிய குடும்பத்தில் இருக்கும் அனைத்து கிரகத்திற்கும் சூரியன் தான் முக்கியமாக இருக்கிறது.

பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் சூரியன் தேவைமிக்க ஒன்றாக இருக்கிறது. சூரியனின் ஆய்வு இன்றைய அறிவியலுக்கு முக்கியமானதாக பார்க்கபடுகிறது. பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான சூரியன் குறித்தும், சூரிய மண்டலத்தின் மீது செலுத்தும் தாக்கம் குறித்தும் அறிந்து கொள்ள இந்த திட்டம் உதவியாக இருக்கும்.

மேலும், சூரியன் என்பது ஒரு நெருப்பு பந்து. அது, 1 மில்லியன் செல்சியஸ் அதாவது 10 லட்சம் செல்லியஸ் வரை வெப்பானதாக இருக்கும். இதை பிரபஞ்சத்தில், வேறு எங்கயும் நாம் உருவாக்க முடியாது. பொருள்களின் நிலையில் நான்காக, அது நிலை, திண்மம், திரவம், வாயு, என சூரியன் முழுக்க முழுக்க பிளாஸ்மாவாக உருவானது. இதனை ஆய்வு செய்வதன் மூலம், மின் காந்த புயல் மற்றும் சூரியனின் உட்புறம், வெளிபுறம் என்று நாம் தெரிந்துக் கொள்ளலாம்.

அதே போல், சூரியனின் கரோனா என்னும் பகுதி, அதாவது, சூரியனின் மகுடம்( Crown of the Sun)பகுதியில் தான் மின்னூட்டபட்ட துகள்களான எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் ஆகியவையும், அயனிகளும் திடீரென வேகம் எடுத்து, ஒலியை விட அதிகமான வேகத்தில் வீசும் சூரியக் காற்றில் நகர்கின்றன.

இந்தப் பகுதிக்குள் சூரியனின் நிலை முற்றிலும் மாறுவதும், கரோனாவுக்கு உள்ளே சூரியனின் காந்தப்புலம் வலிமை மிக்கதாக இருக்கும் என இதற்கு முன்னாள் சில நாடுகள் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது" என பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து, 7-செயற்கை கோள்களின் வேலை என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "மருத்துவ துறையில் ஒரு நோய் அல்லது, உடலில் பிரச்சனை ஏற்பட்டால், எக்ஸ்ரே, ஸ்கேன், ஈ.சி.ஜி. என்று பல வகைகளில் நம் உடலை சோதனை செய்து, இதனால் இது, இதனால் இது என்று தெரிய வருகிறது.

அதே போல் சூரியனை, நாம் தெரிந்து கொள்ள பல்வேறு கருவிகள் தேவைப்படுகிறது. இதில் வி.இ.எல்.சி என்னும் கருவி, சூரியனின் மகுடம்( Crown of the Sun) பகுதியில் மட்டும் மின்னூட்டபட்ட துகள்களான எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் ஆகியவையும், ஐயனிகளையும் ஆய்வு செய்கின்றது. குறிப்பாக அதில் இருந்து வெளிவரும் வெப்பத்தையும் தெரிந்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

எஸ்.யு.ஐ.டி என்ற தொலைநோக்கி, சூரியனில் இருந்து வெளி வரும் உதாகதிரின் இடைவெளி குறித்தும், சூரியனின் வெளிமண்டலம், குறித்தும், புகைப்படங்கள் எடுக்கும். மேலும், தூரத்தில் இருக்கும் புற ஊதா கதிர்களிலும், அருகில் இருக்கும் புற ஊதா கதிர்களிலும் 200-400 நேனோ மீட்டர் இடைவெளியில் ஆய்வுகள் நடக்கூடியது.

இந்த இரண்டு தொழிநுட்ப கருவியும், இந்திய வானியற்பியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. 'ஏ-ஸ்பெக்ஸ்' என்ற கருவி, சூரிய காற்று மற்றும் சூரிய காந்த தன்மைகள் குறித்தும் ஆய்வு செய்யும். சூரிய சக்தியை ஆராயும் சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள், வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ், சூரியனின் வெளிப்புற அடுக்களில் இருக்கும் துகள்கள் மற்றும் அதில், ஏற்படும் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் கிரகங்களுக்கு இடையிலான காந்தப்புல தன்மையை அளவிடும் மேக்னோமீட்டர் ஆகிய '7' முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் '4' கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும். 3 கருவிகள் சூரியனின் வெளிப்பகுதி, துகள்கள், எல்-1 பகுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும்" எனத் தெரிவித்தார்.

எல்.1 பாயின்ட்டை தேர்வு செய்ய காரணம் என்ன? என்ற கேள்விக்கு, "விண்வெளியில் மொத்தம் 5 எல் பாய்ண்ட் இருக்கிறது. அதாவது, ஐந்து சமநிலை பகுதிகள் (சூரியனின் அதிகாமன ஈர்ப்பு விசை, கோளின் குறைந்தபட்ச ஈர்ப்பு விசையின் புள்ளிகள்) உள்ளன. இதில் ஒன்று (எல்-3) சூரியனின் பின் புறத்தில் அமைந்து இருக்கிறது. மற்றொன்று, பூமிக்கும் பின்னால் அமைந்து இருக்கிறது. எல்-2 பாய்ண்ட், சூரியனுக்கும்-பூமிக்கும் இடையிலே அமைந்துள்ளது. எல்.1 பாயிண்ட் அதேப்போல், எல்-4,எல்.5- பாயிண்ட்கள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே மேல் மற்றும் கீழே அமைந்து இருக்கிறது.

எல்.3 பாயிண்டில் ஆய்வு செய்வது கடினம். சூரியனை தாண்டி ஆய்வு செய்வது என்பது கடினமான விஷயம். அதே போல், எல்-2 பாயிண்ட் என்பது, பூமிக்கு பின்புறத்தில் இருப்பதால், 12 மணிநேரம் தான் சூரியனின் பார்வை இருக்கும். அதனால் முழுவதும் அது குறித்து ஆராய முடியாது.

மேலும் எல்.4 மற்றும் எல்.5 பொறுத்த வரையில் மிகவும் சரியான பகுதி அது. சூரியனை இரண்டு கோணத்தில் இருந்து ஆய்வு செய்யலாம். ஆனால் அது தூரத்தில் இருப்பதால், அந்த புள்ளியில் ஆய்வு நடத்துவது என்பது சற்று கடினமான செயல். எல்-1 பாயிண்ட் சூரியனின் நேரடி பார்வையில் இருப்பதால், ஒவ்வொறு நொடியும் சூரியன் குறித்தும், அதில் இருந்து வெளி வரும் அயனி மற்றும் அதில் இருந்து பிரியும் புரோட்டோன், எலக்ட்ரோன் குறித்தும் ஆய்வு செய்ய சரியான பகுதி தான்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடைய தூரத்தில் ஒரு சதவீத தூரத்தில் எல்.1 பாயிண்ட் இருக்கிறது. அங்கு இந்த சமநிலை புள்ளிகளில் தான் ஆர்பிட்டரை சமநிலையில் நிற்கவும், மேலும் விண்கலம், பூமி, நிலவு, மற்ற கிரகங்களை சீரான இடத்தில் நிற்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆகையால், இந்த சமநிலை புள்ளிகளில் இருந்து, ஆராய்ச்சி செய்வதற்கு எளிமையாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சூரியனை ஆராய்வதில் உள்ள முக்கியத்துவம் குறித்து கேட்டப்போது, "சூரியன் ஒரு மிகப்பெரிய ஆய்வுக்கூடம். சூரியனில் இருந்து காமா, எக்ஸ்ரே, ரேடியோ கதிர், இன்ஃப்ராரெட், புற ஊதா கதிர் என பல வகை கதிர்களை குறித்து நாம் தெரிந்துக் கொள்வது அவசியமான ஒன்று.

இந்த கதிர்கள் சூரியனில் இருந்து வரும் போது, ஓசோன் மண்டலத்தில் சில கதிர்கள் தடுக்கபடுக்கின்றன. மேலும் சூரியனில் உண்டாகும் சூரிய காந்த புலம், காந்த புயல், என்னும் பல்வேறு குறித்து நாம் ஆராய்ந்து படிக்கலாம். கொடைக்கானலில் இருக்கும் சூரிய வான் ஆய்வகம் 1902 ஆம் ஆண்டில் இருந்து சூரியனை ஆய்வு செய்து வருகிறது.

குறிப்பாக 4-வெளிமண்டலங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது. சூரியன் என்பது, நம் பூமியின் வாழ்வாதராத்தில் ஒன்று. அதை நாம் எல்லாரும் அறிய வேண்டும். மேலும் இந்த ஆராய்ச்சியால் மற்ற உலக நாடுகளுக்கு ஆதித்யா எல்-1 முன்னோடியாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "சூரியனை ஆய்வு செய்வது மிக முக்கியம்": ஆதித்யா-எல்1 பற்றி விண்வெளி ஆய்வாளர் கூறிய சுவாரஸ்ய தகவல்!

Last Updated : Sep 2, 2023, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.