ETV Bharat / state

'மது அருந்தி வாகனம் ஓட்டுமாறு அரசு கூறவில்லை' - சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர்

கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க புதிய மிஷன் செய்ய ஆலோசித்து வருவதாக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார். சி. சரத்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர்

author img

By

Published : Oct 21, 2022, 8:06 PM IST

சென்னை: திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டம் தமிழ்நாட்டில் வருகிற 28ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் எழுந்தன. இந்நிலையில், அதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார். சி. சரத்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "பழைய அபராதம் உயர்த்தப்பட்டுள்ளதுபோல் குறிப்பிட்ட விதிமீறல்களில் மீண்டும் ஈடுபடுபவர்களுக்கு இரண்டாவது முறையாக புதிய அபராதத்தொகை அட்டவணையின்படி கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும். உயர்த்தப்பட்ட புதிய அபராதத்தொகை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இனி அதிக விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏற்கெனவே அழைப்பு மையங்கள் மூலம் விதி மீறல்களில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து அபராதத்தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 23 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 12.5 விழுக்காடு (60 உயிரிழப்புகள்) குறைந்துள்ளன.

அபராதத்தொகை விதிக்கப்பட்டவர்கள் பழைய அபராதத்தொகைக்கான கட்டணத்தை செலுத்தினால் போதுமானது. 28ஆம் தேதி முதல் விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கே தற்போது விதிக்கப்பட்டுள்ள உயர்த்தப்பட்டுள்ள அபராதத்தொகை பொருந்தும்.

அதேபோல போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமல்லாமல், சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மேல் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் துறையினருக்கும் 170 இ-செலான் மிஷன் மற்றும் 72 பிரீத் ஆனலைசர் கருவி கொடுக்கப்படும். அவர்கள் மூலமும் குடிபோதையில் வாகனத்தை ஓட்டும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்து அபராதம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் செய்த சாலை விதிமீறலை தவிர்த்து வேண்டுமென்றே வேறு ஏதேனும் அபராதம் போக்குவரத்து போலீசாரால் விதிக்கப்பட்டால், பொதுமக்கள் புகார் அளிக்கலாம். தவறு நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, வசூலிக்கப்பட்ட பணம் திருப்பி அளிக்கப்படும்.

மேலும் டாஸ்மாக் கடைகள் முன்பு போக்குவரத்து போலீசார் நின்று அபராதம் விதிப்பதும், வசூலிப்பதும் தவறு இல்லை எனவும் நல்ல முறை'' என்று அவர் கூறினார்.

மேலும், அரசு மதுபானங்களை விற்கிறதே தவிர, மது அருந்தி வாகனம் ஓட்டுமாறு கூறவில்லை என்ற அவர், மது அருந்துபவர்கள் ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலம் செல்ல வேண்டிய இடங்களுக்கு பயணிக்க வேண்டுமே தவிர வாகனங்களை ஓட்டிச் செல்லக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார்.

போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர்

மேலும், மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை பிரீத் அனலைசர் கொண்டு பிடிப்பதுபோல் கஞ்சா, போதை மாத்திரைகள் போன்ற போதைப் பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிக்க நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அதற்கும் ஒரு தீர்வு காணப்படும் எனவும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார். சி. சரத்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.