இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கரோனாவைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சைகள் மேற்கொள்ளவும், அவ்வப்போது மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப பல்வேறு நடவடிக்கைகள் நாள்தோறும் எடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே 108 அவசர கால ஊர்தி சேவை 24 மணி நேரமும் சிறப்பாகச் செயல்பட்டுவரும் நிலையில், கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள கூடுதல் பளுவையும் திறம்பட சமாளிக்கப்படுகிறது.
இந்தச் சவாலான சூழ்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்புகளை கையாளும் விதமாகவும், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் அழைப்பை உடனடியாக ஏற்று, அப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை விரைந்து அனுப்பவும், கரோனா தொற்றுக்கென பிரத்யேகமாக ஒரு கட்டுப்பாட்டு அறையை உருவாக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாட்டு அறை, 10 தொலைபேசி இணைப்புகளுடன் 24 மணி நேரமும் செயல்படும். சென்னையில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044 - 4006 7108 என்ற எண்ணைத் தொடர்புகொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இல்லாமல் பெறுவதற்கு ஏதுவாக அமையும். இதன்மூலம் கரோனா கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை முறைகள் மேலும் வலுப்படுத்தப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமணம் செய்த நிலையில் காதல் ஜோடி தற்கொலை...!