சென்னை அயனாவரத்தில் 2002ஆம் ஆண்டு முதல் ரயில்வே காவல்துறை துப்பறியும் மோப்ப நாய் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு உதவி ஆய்வாளரும், 8 காவலர்களும் பணிபுரிகின்றனர். இங்குப் பயிற்சிபெறும் மோப்ப நாய்கள் ரயில் நிலையங்களிலும், முக்கியமான பாதுகாப்பு இடங்களிலும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபடுகின்றன.
முன்னதாக, இங்கு பணியிலிருந்த ஜாக், ஜெஸ்சி நாய்கள் இறந்ததையடுத்து, 2019 முதல் பெர்னி என்ற மோப்ப நாயை வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தினர்.
இந்நிலையில், தற்போது பாதுகாப்புப் பணிக்காக ஏஞ்சல், ஆகாஸ் என்ற இரு நாய்களைப் போதைப் பொருள்களைக் கண்டுபிடிக்கவும், சாரா என்ற மோப்ப நாயைக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டுபிடிக்கவும், சூர்யா என்ற மோப்ப நாயை வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கவும் என மொத்தம் 4 மோப்ப நாய்களுக்கு ரயில்வே காவல் துறை, கடந்த 6 மாதங்களாகப் பயிற்சியளித்தது.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த நான்கு நாய்களும், தீயணைப்புத் துறை அலுவலக வளாகத்தில் ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு முன்னிலையில் பயிற்சியில் கற்றுக் கொண்டதை சிறப்பாக செய்துக்காட்டி காவல் பணியில் இணைந்தன.
இதையும் படிங்க: பாம்பன் சாலைப் பாலத்தில் மின்கசிவால் தீ விபத்து!