ETV Bharat / state

அழிந்து வரும் அடையாறுவை மீட்டெடுக்க முடியும் - ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!

author img

By

Published : Nov 16, 2019, 3:47 PM IST

சென்னை: உலகில் மோசமான நிலையிலிருந்த பல ஆறுகள் சீரமைக்கப்பட்டுள்ள போது அடையாறையும் மீட்டெடுக்க முடியும் என வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

adayar river restoration is possible said Revenue department Secretary radha krishnan

அடையாறு தூர்வாரப்படும் பணிகளை வருவாய்த்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து, 94.76 கோடி செலவில் அடையாறுவை தூர்வாரும் பணியினைச் செய்து வருகிறன. திருநீர்மலை முதல் முகத்துவாரம் வரை 25 கிமீ நீளம் நடைபெறும் இப்பணிகள், வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆற்றினை அகலப்படுத்துதல், ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளத் தடுப்புகளை அமைத்தல், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 1800 மீட்டர் நீளத்திற்கு கான்க்ரீட் வெள்ளத் தடுப்பு சுவர் அமைத்தல், 8 இடங்களில் வெள்ளத்தடுப்பு உள் வாங்கிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

பொதுவாக மழை காலங்களில், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய்களில் கொட்டுவதால் ஏற்படும் அடைப்பே மழை வெள்ளநீர், ஆற்றுக்குச் செல்வதை தடுக்கிறது .எனவே, இதுபோன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

அடையாறை மீட்க முடியும் வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

உலகில் பல முக்கிய ஆறுகள் அடையாற்றைவிட மோசமான நிலையில் இருந்தபோதும், அவை சீரமைக்கப்பட்டுள்ளன எனும் போது அடையாறுவையும் மீட்டெடுக்க முடியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அரசியலில் வெற்றிடமே கிடையாது- பாரிவேந்தர் எம்.பி

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 16.11.19

தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் திருநீர்மலை பாலம் முதல் முகத்துவாரம் வரையில் அடையார் ஆற்றினை தூர் வாரி மீட்டெடுக்கும் பணிகள் 94.76 கோடி மதிப்பில் நடைபெற்று வருவதை வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்...

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 94.76 கோடி செலவில் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியும் இணைந்து தூர்வாரும் பணியினை செய்து வருகிறது. திருநீர்மலை முதல் முகத்துவாரம் வரை 25 கிமி அடையாறு ஆற்றை தூர் வாரும் பணிகள் ஜனவரிக்குள் முடியும் நிலையில் உள்ளது. சுமார் 11400 ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆற்றினை அகலப்படுத்துதல், ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளத் தடுப்புகளை அமைத்தல், பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் 1800 மீட்டர் நீளத்திற்கு கான்க்ரீட் வெள்ளத் தடுப்பு சுவர் அமைத்தல், 8 இடங்களில் வெள்ளத்தடுப்பு உள் வாங்கிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. பொதுவாக மழை காலங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள கழிவுநீர் கால்வாய் களில் போடுவதால் ஏற்படும் அடைப்பே மழை வெள்ள நீர் ஆற்றுக்கு செல்வதை தடுக்கிறது என்பதை உணர்ந்து இதுபோன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும். உலகில் பல முக்கிய ஆறுகள் அடையாறைவிட மோசமான நிலையில் இருந்ததையும் சிரமைக்கப்பட்டுள்ளது என்னும் போது அடையாற்றையும் மீட்டெடுத்து கொண்டு வர முடியும் என்றார்...

tn_che_02_adyar_river_restoration_works_radhakrishnan_byte_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.