ETV Bharat / state

பழம்பெரும் நடிகை உஷாராணி காலமானார்! - உஷாராணி மரணம்

சென்னை: பிரபல நடிகை உஷாராணி சிறுநீரக பிரச்னை காரணமாக உயிரிழந்தார்.

நடிகை உஷாராணி
நடிகை உஷாராணி
author img

By

Published : Jun 21, 2020, 12:21 PM IST

நடிகை உஷாராணி 'பட்டிக்காட்டு பொன்னையா', 'உன்னைப்போல் ஒருவன்', 'அரங்கேற்றம்', 'ஜக்கம்மா', 'குமாஸ்தாவின் மகள்' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெயசங்கர், பிரேம் நசீர், கமல், ஸ்ரீதேவி உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இவர் நடித்திருக்கிறார். இவர் இறுதியாக தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ராஜாங்கம் படத்தில் நடித்திருந்தார். இதுமட்டுமில்லாது மலையாளத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் உஷாராணி நடித்துள்ளார்.

இவர் இயக்குநர் ஷங்கர் நாயரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு விஷ்ணு என்ற ஒரு மகன் உள்ளார். இதனையடுத்து சென்னை ஆலப்பாக்கத்தில் மகன் மருமகளோடு வசித்துவந்த உஷாராணி, ஜூன் 15ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 16ஆம் தேதி வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ( ஜூன் 21) அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 66.

இதனையடுத்து அவரது இறுதி சடங்குகள் நாளை ( ஜூன் 22) நடைபெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

இதுகுறித்து நடிகை உஷா ராணியின் தங்கை ரஜனி, உஷா ராணியின் சொந்தங்கள் ஏராளமானவர்கள் கேரளா திருவனந்தபுரத்தில் உள்ளனர். அவர்கள் இவரது இறுதிச் சடங்கிற்கு வரமுடியாத சூழல் உள்ளது. சென்னையில் உஷாராணி, அவரது மகன் மருமகள் மட்டுமே உள்ளதால், உதவுவதற்கு யாரும் இல்லாமல் இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் உஷாராணி இறப்பு செய்தி குறித்து மோகன்லால், கமலஹாசனுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். இதனையடுத்து ஜெயராம், பிரியதர்ஷன், கீர்த்தி சுரேஷின் தந்தை ஆகியோர் இவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.