சென்னை: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை புகார் அளித்தார்.
அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். தற்போது மணிகண்டன் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
இந்தநிலையில், துணை நடிகை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றை நேற்று (ஜூலை 22) தாக்கல் செய்தார். அதில், "முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் மன ரீதியிலும், உடல் ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரிடமிருந்து 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்.
இந்த வழக்கை சென்னையிலிருந்து நடத்த வேண்டும் என்ற காரணத்தினால் தனக்கு மாதம் குறிப்பிட்ட தொகையை இடைக்கால நிவாரணமாக வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 5 விசாரணை
திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழும் தம்பதியினர் இடையே இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டால் இழப்பீடு கோரலாம் என்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கை துணை நடிகை தொடர்ந்துள்ளார்.
மனுவை ஏற்றுக்கொண்ட சைதாப்பேட்டை நீதிமன்றம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசியல் காழ்ப்புணர்ச்சியில் ரெய்டு - ஓபிஎஸ், ஈபிஎஸ் குற்றச்சாட்டு