சாந்தினி : சாந்தினி மலேசியாவிலிருந்து பேசுறேன்.
மருத்துவர் அருண் : நலமாக இருக்கிறீர்களா?
சாந்தினி : நலமாக இருக்கிறேன். அமைச்சர் மணிகண்டன் செய்த விவகாரத்தால் எனது வயிறுப் பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு கருப்பு அடையாளம் உள்ளது. இந்த கருப்பு அடையாளத்தால் எனது தாயார் பல்வேறு கேள்விகளை கேட்கிறார். இதற்கு என்ன பதில் அளிப்பது?
மருத்துவர் அருண்: எந்த மாதிரியான பாதிப்பு இருக்கிறது?
சாந்தினி : அமைச்சர் மணிகண்டன் எனக்கு செய்த விவகாரத்தின் கர்ம வினைதான், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அமைச்சரால் எவ்வளவு பாதிக்கப்பட்டேன். அமைச்சர் தனக்கு செய்த அனைத்துக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும். பதிலளிக்க வேண்டும்.
மருத்துவர் அருண் : ஆமாம், உண்மை தான்.
சாந்தினி : மருத்துவரே, அமைச்சர் மணிகண்டன் உங்கள் நண்பர்தானே அவருக்குப் பதவி போனது ஏன் என உங்களுக்குத் தெரியாதா? அவரது பேச்சினால் தான் பதவி போனது. அரசுக்கு துரோகம் செய்துவிட்டார்.
மருத்துவர் அருண் : ஆமாம்.
சாந்தினி : உடல் முழுவதும் காயங்கள், கருப்பு அடையாளங்கள் உள்ளன. பெற்றோர் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை. இது தொடர்பாக அமைச்சர் மணிகண்டனைத் தொடர்பு கொண்டால் பேச மறுக்கிறார். நான் எத்தனை முறை கருக்கலைப்பு செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள்தான் எனக்கு கருக்கலைப்பு செய்தீர்கள். நீங்கள் கூறியதற்கு தற்போது அமைச்சர் என்ன சொல்கிறார். நான் தொடர்பு கொண்டாலும் அழைப்பை எடுப்பதில்லை. முற்றிலுமாக தவிர்க்கிறார். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து முதலமைச்சரிடம் நேரடியாக புகார் அளித்தால், அமைச்சர் மணிகண்டனின் நிலை என்ன ஆகும் என தெரியுமா?ஏற்கனவே அமைச்சர் மணிகண்டனுக்கு அதிக பிரச்னை உள்ளது. இது போன்று நான் எங்கேயாவது புகார் அளித்திருக்கிறேனா? நீங்கள் என்னைப் பயன்படுத்திவிட்டு துரத்தியடிக்கும்படி தெரிவித்ததாக, அமைச்சர் மணிகண்டன் என்னிடம் கோபமாக தெரிவித்தார். இது உண்மையா? அமைச்சர் மணிகண்டன் எனக்கு பல முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்த போதும், பல பிரச்னைகள் ஏற்பட்ட போதும், அதை பயன்படுத்தி நான் அதை வைத்து எதையும் எதிர்பார்க்கவில்லை. அது உங்களுக்கும் தெரியும். மலேசியாவில் ஒரு முக்கிய புள்ளியாக இருப்பவள் நான்.
மருத்துவர் அருண் : நான் அது போன்று தெரிவிக்கவில்லை.
சாந்தினி: நான் ஒரு முக்கியப் புள்ளி. எனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து நான் எது வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால், நான் எதையும் மணிகண்டனுக்கு செய்யவில்லை. நான் இந்த பிரச்னையை முதலமைச்சர் பழனிசாமியிடம் எடுத்துச் செல்வேன். ஏனென்றால் நான் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவள். முதலமைச்சரும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். நானும், முதலமைச்சரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள். என்னால் முதலமைச்சர் உட்பட எந்த அமைச்சரையும் நேரடியாக சந்திக்க முடியும். இறுதியாக முதலமைச்சரிடம் செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
மருத்துவர் அருண்: பழகிய எனக்கும் எதுவும் செய்யவில்லை, அவரது தொகுதி மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. மலேசியாவில் உள்ள ராமநாதபுரம் மக்களும் அமைச்சர் மணிகண்டன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர், எனக்கு தெரியும்.
சாந்தினி : ஒரு நண்பராக மணிகண்டனுக்கு நீங்கள் அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை?
மருத்துவர் அருண் : நாங்கள் பல அறிவுரை வழங்கியும் அமைச்சர் கேட்கவில்லை.
சாந்தினி : மணிகண்டனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோது மலேசியாவில் வெடி வெடித்துக் கொண்டாடினேன். அரசிடம் நேரடி தொடர்பில் இருந்தேன். அவருக்கு பதவி போக போகிறது என்பதை ஒன்றரை மாதத்திற்கு முன்பாகவே அவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் நம்பவில்லை. தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்ற மமதையில் இருந்தார். நான் சாலையோரமாக நிற்கும் பெண்ணல்ல, தூதரகத்துடன் தொடர்பில், அரசு பதவியில் இருப்பவள்.
நான் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். மலேசிய தூதரகத்தில் பொறுப்பில் இருக்கும் நான், அவருக்கு எதிராக கடிதம் எழுதினால் அமைச்சர் மணிகண்டன் நிலை என்ன ஆகும்? எனக்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லையெனில், சென்னைக்கு வந்து அனைத்து ஆதாரங்களையும் வைத்து முதலமைச்சரிடம் புகார் அளிப்பேன்.
கருக்கலைப்பு செய்த காரணத்தினால் உங்களுடைய பெயரை இழுக்க மாட்டேன். இருந்தாலும் நண்பர் என்ற அடிப்படையில் உங்களை எச்சரிக்கிறேன். அமைச்சர் மணிகண்டனுக்காக மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை, வேண்டுதல் ஆகியவை இருந்தேன்.
இதனால் எனது எடை குறைந்தது. ஆனால், இதைத் தவறாக குற்றம்சாட்டி பலருடன் தொடர்பில் இருப்பதால்தான் எடை குறைந்துள்ளதாக அவதூறு செய்தார். மணிகண்டன் இதுபோன்று அவதூறாக பேசியதால் தான் மணிகண்டன் பதவி பறிபோனது. தவறுகளை சுட்டிக்காட்டும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது தான் அவர் தற்போது தனித்து விடப்பட காரணம். அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட உள்ளார் என முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து எனக்கு நேரடியாக முன்கூட்டியே தகவல் தெரிந்தது. அவர் நம்பவில்லை. தற்போது அது நடந்து விட்டது. நானும், முதலமைச்சரும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நான் மணிகண்டன் குறித்து சொன்னால் என்னவாகும்?
மருத்துவர் அருண் : அவ்வாறு நீங்கள் புகார் அளித்தால் மணிகண்டன் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பில்லை.
சாந்தினி : புகாரளித்தால் என்னை அனைத்து வகையிலும் காலி செய்து விடுவேன் என கெட்ட வார்த்தையில் தெரிவிக்கிறார். பதவி போனது தனக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை எனவும் தெரிவிக்கிறார். அமைச்சர் மணிகண்டன் உடன் பணிபுரியும் பணியாளர்கள், காவலர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட தராத அளவு மோசமானவர். அவருடன் பணிபுரியும் அனைவரும் அமைச்சர் மணிகண்டன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இது தொடர்பான அறிக்கை தொடர்ந்து முதலமைச்சருக்கு சென்று கொண்டு தான் உள்ளது. அமைச்சர் பதவி மணிகண்டனிடம் பறிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் அருண் : தற்போது மணிகண்டனிடம் இருந்து என்ன வேண்டும்?
சாந்தினி : எனக்கு எதுவும் வேண்டாம், அவருடைய இந்த நிலைமைக்கு காரணம் அவர்தான் என்ற அந்த விஷயத்தை மட்டும் மணிகண்டனிடம் புரிய வையுங்கள். மேல்மட்டத்தில் இருந்து, கீழ்மட்டம்வரை மணிகண்டன் குறித்து விசாரித்த போது யாரும் நல்ல விதமாக தெரிவிக்கவில்லை. முதலமைச்சரும் மிகவும் அதிருப்தியில் உள்ளார். மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்தாலும், சாதாரண அமைச்சர் பதவியை கொடுப்பார் என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது.
மருத்துவர் அருண் : முதலமைச்சர் ஏன் அதிருப்தியில் இருக்கிறார்?
சாந்தினி: அவரது சொந்த தொகுதிக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை என்பதால் தான் முதலமைச்சர் அதிருப்தியில் இருக்கிறார். ஜாதி ரீதியாக பார்ப்பது தான், நயினார் நாகேந்திரன் கட்சி விட்டு விலகுவதற்கு முக்கிய காரணம். கல்லூரிக் காலத்தில் நான் பெரிய ரவுடி. மலேசிய தூதுவராக மாறிய பிறகே எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அமைதியாக இருக்கிறேன். நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம் அமைச்சர் மணிகண்டனுடன் உறவு வைத்துக் கொண்டதுதான், மணிகண்டனை தவிர்த்து நான் யாரிடமும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், நான் பல அமைச்சர்கள் உடன் செல்வதாக தொடர்ந்து சந்தேகப்பட்டு குற்றம்சாட்டினார். அமைச்சர் மணிகண்டன் மட்டுமே என்னுடன் உறவு வைத்திருந்தார். அது அவரது நண்பர்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். அமைச்சர் பதவி போன பிறகு பூஜைகளும், யாகங்களும் நடத்தி வருகிறார் மணிகண்டன்.
மருத்துவர் அருண் : அமைச்சர் எங்கு இருக்கிறார்? அமைச்சரின் அரசு இல்லத்திலா?
சாந்தினி : பதவி பறிக்கப்பட்டும் மூன்று மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டதால் அங்குதான் வசிக்கிறார். அமைச்சர் மணிகண்டன் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்றால் பரவாயில்லை. என்னை பல அமைச்சர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஏன் மலேசிய ராஜாவே என்னை பின் தொடர்கிறார்.
இவ்வாறு நிறைவுறுகிறது அந்த உரையாடல்.