ETV Bharat / state

Shalu Shammu: ஷாலு ஷம்முவின் 2 லட்ச ரூபாய் செல்போன் மிஸ்ஸிங்.. நண்பர்கள் மீது சந்தேகம் என கேஸ்! - Foreshore Estate police station

நடிகை ஷாலு ஷம்மு 2 மாதத்திற்கு முன்பு வாங்கிய 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோனை காணவில்லை எனவும், நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Actress Shalu Shamu has filed a complaint in the police station her iPhone is missing and her friends are suspicious
நடிகை ஷாலு ஷம்மு தன்னுடையை ஐபோனை காணவில்லை எனவும் நன்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
author img

By

Published : Apr 14, 2023, 2:11 PM IST

சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இயங்கி வருகிறார்.

புரசைவாக்கம் வைகோகாரன் தெருவை சேர்ந்த ஷாலு ஷம்மு, கடந்த ஜனவரி மாதம் 2 லட்ச ரூபாய் கொடுத்து ஐபோன் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இரவு ஈஸ்டர் பண்டிகையன்று நண்பர்களோடு இணைந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

பின்னர் பார்ட்டியை முடித்துவிட்டு நள்ளிரவு 2 மணியளவில் நண்பர்களுடன் இணைந்து சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில் ஷாலு ஷம்மு தங்கி உள்ளார். பின்னர் ஏப்ரல் 10ஆம் தேதி காலை எழுந்து பார்த்த போது ஷாலு ஷம்முவின் விலையுயர்ந்த ஐபோன் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், நண்பர்களுடன் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

மேலும் பல இடங்களில் தேடிய போதும் செல்போன் கிடைக்கவில்லை. இதனையடுத்து நடிகை ஷாலு ஷம்மு கடந்த 11ஆம் தேதி தனது செல்போனை கண்டுபிடித்து தரக்கோரி பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் காணாமல் போன செல்போனை நடிகை ஷாலு ஷம்முவே மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக செல்போனை மீட்கும் செயலியான ஐகிளவுடு மூலமாக தீவிரமாக தேடிய போது, சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில் செல்போன் கடைசியாக இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

இதனால் தனது நண்பர்கள் சிலரின் மீது சந்தேகம் இருப்பதாக கூறி நடிகை ஷாலு ஷம்மு பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் பட்டினம்பாக்கம் போலீசார் சந்தேகத்துக்குரிய நபர்களை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பிரபலங்கள் வீட்டில் கைவரிசை காட்டும் பணியாளர்கள்; போலீசார் பரிந்துரை என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.