ETV Bharat / state

இவர் தான் டாப்ஸிக்கு குரல் கொடுத்தாரா..?

'அனபெல் சேதுபதி’ படத்தில் டாப்ஸிக்கு டப்பிங் கொடுத்த பிரியா, பிரிட்டிஷ் பாணியில் துல்லியமாக பேசி அசத்தியதாக அப்படத்தின் இயக்குநர் தீபக் சுந்தரராஜன் பாராட்டினார்.

Actress Priyalal
Actress Priyalal
author img

By

Published : Sep 19, 2021, 8:33 PM IST

சென்னை: தீபக் சுந்தரராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அனபெல் சேதுபதி'. டாப்ஸி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா, யோகிபாபு, ஜெகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், சுப்பு பஞ்சு, மதுமிதா, சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்தில், வெளிநாட்டு பெண் வேடம் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் டாப்ஸி. அதிலும், ஆங்கில உச்சரிப்பில் டாப்ஸி பேசும் அழகு அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் உயிரூட்டியது. அந்த குரலுக்கு உயிரூட்டியவர், தென்னிந்திய நடிகை பிரியா லால்.

நடிகை பிரியா லால்.
நடிகை பிரியா லால்.

இந்த கதாபாத்திரத்திற்காக பல நடிகைகள் மற்றும் டப்பிங் கலைஞர்களை வரவழைத்து டப்பிங் செய்து பார்த்தனர். ஆனால் எந்த குரலும் பிரிட்டிஷ் பாணி உச்சரிப்புடன் பொருந்தவில்லை. இந்நிலையில் தான் பிரியா-லால் குறித்தும் அவரது குரல் வளம் மற்றும் துல்லியமான ஆங்கில உச்சரிப்பு பற்றியும் தெரியவந்தது.

இவர் தமிழ், தெலுங்கு பாடங்களில் ஹீரோயினாக நடித்து வருவதால், டப்பிங் பேச சம்மதிப்பாரா என்ற சந்தேகம் படக்குழுவினருக்கு. இருந்தாலும் படத்தின் தன்மையை உணர்ந்து படக்குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்கி பிரியா லால் குரல் கொடுக்க ஒப்புக்கொண்டார். பிறகு பிரியாவின் குரல், அவ்வளவு துல்லியமாக பிரிட்டிஷ் பாணிக்கு பொருந்திப்போனதை நாங்கள் பாராட்டினோம் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பிளான் பண்ணி பண்ணனும்” - வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.