தில்லாலங்கடி, ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சந்திரா லக்ஷ்மண் தற்போது தொடரிலும் அசத்திவருகிறார். 'ஸ்வந்தம் சுஜாதா' மலையாள தொடரில் நடித்துவரும் சந்திராவுக்கும், அவருடன் சேர்ந்து நடிக்கும் டோஷ் கிறிஸ்டிக்கும் இடையே காதல் மலர்ந்தது.
![actress chandra lakshman got married chandra lakshman chandra lakshman marriage tosh christie actress chandra lakshman married tosh christie நடிகைக்கு திருமணம் சந்திர லக்ஷ்மண் சந்திர லக்ஷ்மண் திருமணம் சந்திர லக்ஷ்மண் டோஸ் கிறிஸ்டியை திருமணம் செய்துகொண்டார் சந்திர லக்ஷ்மண் டோஸ் கிறிஸ்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13612700_chandra.png)
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி கேரளாவில் இருக்கும் தனியார் ரிசார்ட் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. இரண்டு மாதங்களுக்கு முன்பு டோஷ் கிறிஸ்டியின் கரங்களைப் பற்றியபடி புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் திருமணம் குறித்து சந்திரா அறிவிப்பு வெளியிட்டார்.
![actress chandra lakshman got married chandra lakshman chandra lakshman marriage tosh christie actress chandra lakshman married tosh christie நடிகைக்கு திருமணம் சந்திர லக்ஷ்மண் சந்திர லக்ஷ்மண் திருமணம் சந்திர லக்ஷ்மண் டோஸ் கிறிஸ்டியை திருமணம் செய்துகொண்டார் சந்திர லக்ஷ்மண் டோஸ் கிறிஸ்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13612700_actress.jpg)
தற்போது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொலிகளை வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: தெலுங்கு ரீமேக்: 'த்ரிஷ்யம் 2' வெளியாகும் தேதி அறிவிப்பு