ETV Bharat / state

சந்திரயான் 3 வெற்றி - ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வாழ்த்து! - 4th country to land a spacecraft peacefully

Cinema Stars Wish ISRO : சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கிய நிலையில், திரை துறையினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

சந்திரயான் வெற்றி - ரஜினி, கமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 11:22 AM IST

Updated : Aug 24, 2023, 11:31 AM IST

சென்னை: நம் வாழ்வில் பெரும் கணவுகளை காண நம்மை எப்போது ஊக்கப்படுத்துவதில் நிலாவும், நட்சத்திரங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. குழந்தை பருவத்தில் பெற்றோருடன் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு நிலாவை பார்த்து ரசித்து, அதன் அழகில் பிரம்மித்து, “ஏம்ப்பா நாம் நிலாக்கு போக முடியுமா?” என்ற கேள்வியை வாழ்வில் ஒருமுறையாவது நாம் அனைவரும் கேட்டிருப்போம்.

அத்தகைய கணவுகளுக்கு பதிலாக நிலவில் மனிதன் வாழமுடியுமா என்பதை தெரிந்துகொள்ள இஸ்ரோ முன்னெடுத்த முயற்சியாக இந்த ஆராய்ச்சிகள் அமைந்தன. அந்த வகையில் இதுவரை யாரும் சென்றிராத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் தேதி இந்தியா விண்ணில் செலுத்தியது.

பூமி மற்றும் நிலவின் சுற்றுப்பாதைக்குள் பல்வேறு கட்ட அடுக்குகளில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி நேற்று (ஆகஸ்ட் 23) ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் சர்வதேச அளவில், நிலவில் அமைதியான முறையில் விண்கலத்தை தரையிறக்கிய 4 வது நாடு என்கிற பெருமையையும், தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற வரலாற்று சிறப்பையும் இந்தியா பெற்றுள்ளது.

படிப்படியாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி, இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார். இந்தியாவின் இந்த பெருமைமிகு சாதனை நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திரை பிரபலங்களும் தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா சாதனை: அந்த வகையில் தேசம் தனது பெருமைக்குரிய அடையாளத்தை முத்திரை குத்தியுள்ளதாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது கூறித்து அவர் கூறுகையில், "அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா இந்த மாபெரும் சாதனையால் உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

முதன்முறையாக, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கியதன் மூலம் நமது தேசம் தனது பெருமைக்குரிய அடையாளத்தை முத்திரை குத்தியுள்ளது. நீங்கள் எங்களை பெருமைப்படுத்தி உள்ளீர்கள். இஸ்ரோவுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டு உள்ளார்.

  • While superpowers like the US, Russia, and China watch in agast amazement, India stuns the world with this humongous achievement.

    For the first time ever, our nation stamps it’s proud identity by landing #Chandrayaan3 on the south pole of the moon!

    My heartfelt congratulations…

    — Rajinikanth (@rajinikanth) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில், "செயற்கைக்கோள் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது முதல் நிலவில் இறங்கியது வரை என்ன ஒரு பயணம். இஸ்ரோ அணி தேசத்தின் பெருமை. நமது தேசத்தின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள் இது. இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை" என தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார்.

  • From carrying satellite parts on bicycles to landing on the moon - What a journey it has been! Team ISRO is the pride of the nation. A historic day which will forever be etched in our nation’s spacefaring odyssey. The day is not far when Indians will walk on the moon. @isropic.twitter.com/u24yQDvYj0

    — Kamal Haasan (@ikamalhaasan) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அனைவரையும் ஒற்றுமையாக உணரச் செய்ததற்காக நன்றி: இது குறித்து நடிகர் சூர்யா கூறுகையில், "இஸ்ரோ குழுவுக்கு நன்றி. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தென் துருவச் சந்திரயான் 3 தரையிறக்கத்தில் உங்கள் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடுவதில் அனைவரையும் ஒற்றுமையாக உணரச் செய்ததற்காக நன்றி" என தெரிவித்து உள்ளார்.

சந்திரன் அதற்கும் அப்பால் நாம் அடைய முடியும்: அதே போல் நடிகர் சிம்பு தனது ட்விட்டர், "நிலவில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த நாள் ஒவ்வொரு இந்தியனுக்கும் சரித்திரமாக அமைந்துள்ளது. நட்சத்திரங்கள், சந்திரன் அதற்கும் அப்பால் நாம் அடைய முடியும் என்ற பெருமையும் நம்பிக்கையும் ஒரு சேர கிடைத்த தருணம்" என இஸ்ரோவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

  • Big congratulations to @isro on the successful soft landing of #Chandrayaan3 on the moon. This day is historic for every Indian, a moment of pride and belief that we can reach for the stars, the moon and beyond. Proud! 🇮🇳 #ISRO pic.twitter.com/F32pS5DTkY

    — Silambarasan TR (@SilambarasanTR_) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஒரு இந்தியனாக இருப்பதில் மகிழ்ச்சி: நடிகர் விஷால், மிகவும் பெருமை, ஒரு இந்தியனாக இருப்பதில் மகிழ்ச்சி. மிகவும் உற்சாகமாக உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் மாதவன் இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வளைதலத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதேபோல் மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், இந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : சினிமா சிதறல்கள்: விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த நகர்வு முதல் அர்ஜுன் தாஸின் புதிய படம் வரையிலான சூடான சினிமா தகவல்கள்!

Last Updated : Aug 24, 2023, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.