ETV Bharat / state

நடிகர் விஜய் மேல் முறையீட்டு மனு மீது விரைவில் விசாரணை - நடிகர் விஜய் மேல் முறையீட்டு மனு

v
v
author img

By

Published : Jul 22, 2021, 11:48 AM IST

Updated : Jul 22, 2021, 12:59 PM IST

11:39 July 22

நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி விதித்த ரூ. 1 லட்சம் அபராதத்தை செலுத்திய பின்னர் மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தள்ளுபடி செய்தார்.

 நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.  

அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதிப்புக்கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது என்பதாலும், விலக்கு கேட்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வில், இன்று (ஜூலை.22) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

விஜய் மேல்முறையீட்டு மனுவை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தனி நீதிபதி உத்தரவின்படி அபராதத்தொகை 1 லட்சம் ரூபாயை கட்டியதற்கான அறிக்கையை ஜூலை 28 நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதால், எண்ணிடும் பணி முடிந்ததும், வழக்கு வரும் திங்கட்கிழமை (ஜூலை 26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சொகுசு கார் நுழைவு வரி விவகாரம் - நடிகர் விஜய் மேல்முறையீடு

Last Updated : Jul 22, 2021, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.