சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64ஆவது நினைவுநாள் இன்று (டிச. 06) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்திவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக இயக்குநரும், நடிகரும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.