ETV Bharat / state

கவனப்படுத்துவது கலைப் பொறுப்பு; உண்மையான சமூக மாற்றங்களுக்கு அரசு பொறுப்பு - சூர்யா

author img

By

Published : Nov 15, 2021, 2:09 PM IST

கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும் என சூர்யா (suriya) 'ஜெய் பீம்' (jai bhim) படத்தைப் பார்த்து பாராட்டிய தொல். திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

suriya
suriya

சூர்யா (suriya) நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம் (jai bhim). இப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, ஆட்சியர், காவல் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அரசின் முக்கியப் பணியாற்றிவருபவர்களும் ஜெய் பீம் படத்தை வெகுவாகப் பாராட்டிவருகின்றனர். மேலும் விமர்சகர்கள், ரசிகர்கள் எனப் பலதரப்பட்டோர் 'ஜெய் பீம்' (jai bhim) படத்தைப் பாராட்டி சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.

இந்நிலையில், மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan) அவரது ட்விட்டரில், "ஜெய் பீம் திரைப்படம் வழியாக காலம் காலமாய் எவராலும் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டோர் கதறியழும் அவலக்குரலை அழுத கண்களுடன் அகிலத்தையே கேட்கவைத்த பாதிக்கப் பட்டோருக்காகச் சட்டத்தின் வழி போராடி வென்ற சமூகநீதிப் போராளியைப் போற்றி பெருமைப்படுத்திய சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வுடன்கூடிய தொண்டுள்ளத்தை தொழிலறத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம்" எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு சூர்யா இன்று (நவம்பர் 15) நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,"மதிப்புக்குரிய திரு. தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் வாழ்த்தும் பாராட்டும் மன நிறைவை அளித்தன.

மதிப்புக்குரிய திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு… @thirumaofficial #JaiBhim pic.twitter.com/WOaHkrCYJ3

— Suriya Sivakumar (@Suriya_offl) November 15, 2021 ">

மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தங்கள் குறிப்பிட்டதைப் போல, தமிழ்நாடு முதலமைச்சர் பழங்குடியின் மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.

பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம். கவன படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்க மூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி" என சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சூர்யாவின் படம் தியேட்டர்களில் திரையிட்டால் கொளுத்துவோம் - காடுவெட்டி குரு மருமகன் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.