ETV Bharat / state

கோயிலுக்கு எதிரானவன் நான் இல்லை - நடிகர் சூரி - இயக்குநர் முத்தையா உருக்கமாக பேச்சு

கோயிலுக்கு எதிரானவன் நான் இல்லை என விருமன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூரி தெரிவித்தார்.

நடிகர் சூரி
நடிகர் சூரி
author img

By

Published : Aug 8, 2022, 9:43 PM IST

சென்னை: கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, அதிதி, இயக்குநர் முத்தையா, ராஜ் கிரண், சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிங்கம் புலி: மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நிறைய பேசிவிட்டோம். நிறைய அன்பு சூர்யா, கார்த்தி என ரசிகர்கள் கத்திக்கொண்டே இருந்தனர். ஆரம்பத்தில் இருந்து விழாவாக உள்ளது. திரையில் பார்க்கும் போது அவ்வளவு அழகாக இந்த படம் உள்ளது. நிறைய மண் சார்ந்த படங்கள் முத்தையா வைத்துள்ளார். அதிதி தான் எங்களுடைய தமிழின் ஆலியா பட் என்றார்.

சாண்டி மாஸ்டர்: முதல் முறையாக கார்த்தி உடன் இணைந்துள்ளேன். அதிதி சிறப்பாக நடனமாடி உள்ளார். அவர் ஒரு சிறந்த டான்சர் என்றார்.

பாடலாசிரியர் சினேகன்: மதுரையில் நடந்த நிகழ்ச்சிக்கு பாடலாசிரியர்கள் அழைக்கவில்லை என்று சொல்லி இருந்தேன் அது பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது. அன்பின் மிகுதியால் தான் அப்படி சொன்னேன் வேறு எதுவும் இல்லை. சம்பளம் கூட காணாமல் போய் விடும். ஆனால் அந்த அங்கீகாரம் தான் எங்களை அடுத்த படத்திற்கு கொண்டு செல்லும். அதன் காரணமாகவே அப்படி சொன்னேன். 2டி மேலேயே குற்றச்சாட்டு சொல்லி இருக்கிங்க வாய்ப்பு தராமல் போனால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள். உண்மையை சொன்னால் வாய்ப்பு தராமல் போனால் போகட்டும். ஆனால் 2டி என்னுடைய குடும்பம் அதன் காரணமாகவே இதை சொன்னேன் என்றார்.

இயக்குனர் ராஜீ முருகன்: என்னோட படத்தின் கதைக்காக கார்த்தியை சந்திக்க தேனி சென்றேன். அப்போது தான் இந்த படத்திற்கு பாடல்கள் எழுதினேன். நான் எழுதிய ஒரு பாடலை இளையராஜா பாடியுள்ளார் அது எனக்கு மிகப்பெரிய பெருமை என்றார்.

நடிகர் சூரி: செய்ய முடியாத விஷயங்கள் நிறைய சூர்யா செய்து வருகிறார். 2டி நிறுவனம் சார்பில் நிறைய பேருக்கு வேலை கொடுத்து வருகிறார். நீங்கள் எப்போதும் நல்ல இருப்பிங்க. இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் ராஜ்கிரண் வேட்டி கட்டுவது அழகு தான். எவ்வளவு உழைப்பு கொடுக்க முடியுமோ அதை கார்த்தி கொடுத்து கொண்டே இருக்கிறார். கடவுளுக்கு எதிரானது நான் கிடையாது. நான் எந்த வேலை தொடங்கினாலும் மதுரை மீனாட்சி அம்மனை வைத்து தான் ஆரம்பிப்பேன். நான் மதுரை மீனாட்சியை எப்போதும் வழிப்படுவேன். அத்துடன் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது. சிலர் நான் சொன்னதை தவறாக எடுத்து கொண்டனர். நான் படிக்காதவன் அதனால் மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று தான் அதை சொன்னேன் என்றார்.

நடிகை அதிதி: என்னுடைய கனவை நோக்கிய பயணிக்க வைத்த எனது குடும்பத்திற்கு நன்றி. என் வீட்டை விட்டு நான் எங்கும் போனது இல்லை என்னை ரொம்ப நல்ல பாத்துகிட்டாங்க 2டி நிறுவனத்திற்கு நன்றி. கார்த்தியிடம் இருந்து தினமும் நிறைய கற்று கொண்டேன். ராஜ் கிரண் கிட்ட இரண்டு ஜோக் தான் சொன்னேன் அவரே ஷாக் ஆகி விட்டார் என்றார்.

தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன்: உறவுகளுக்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த படத்தின் கதை. எல்லாரையும் ஒன்றாக அரவணைத்து கொள்ள வேண்டும் என்பது தான். பாடலாசிரியரை இசை வெளியீட்டு விழாவில் அழைக்காமல் போனது தவறு தான் அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. பாடலாசிரியர் சினேகன் கால் செய்து மன்னிப்பு கேட்டேன் என்றார்.

விருமன் படத்தின் இயக்குனர் முத்தையா: தொடர்ந்து மண் சார்ந்த படங்கள் தான் எடுத்து வருகிறேன். தொடர்ந்து எனக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். உறவுகளை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். பாசம் தான் ஒரு மனிதனை கட்டுப்படுத்தும் என நினைக்கிறேன். அதை தான் நான் பதிவு செய்து வருகிறேன். இந்த படம் விருமன் அப்படி தான். இது ஒரு உண்மை சம்பவம். என் வீட்டு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து தான் இந்த படம் எடுத்துள்ளேன். என்னுடைய படங்களில் செட் எதுவும் போட்டது கிடையாது. ஆனால் இந்த படத்தில் சில காட்சிகள் செட் போட்டு எடுத்துள்ளோம். எனக்கும் சிட்டி தொடர்பான படங்கள் பண்ண ஆசை தான். தவறாக நான் படம் எடுக்க மாட்டேன். யார் மனதும் கஷ்டப்படும் அளவிற்கு படம் எடுக்க மாட்டேன். அதில் உறுதியாக உள்ளேன் என்றார்.

விருமன் நடிகர் கார்த்தி: கிராமங்கள் மாறவில்லை கலாச்சாரம் மாறவில்லை. நிறைய பேர் கிராமத்து படம் பண்ண சொல்லி கேட்டார்கள். ஆனால் படத்திற்கு படம் வித்தியாசம் வேண்டும் என்றே படம் பண்ணி வருகிறேன். பருத்திவீரன் படத்தில் கிராமத்து படமாக தான் ஆரம்பித்தேன். கஞ்சா பூ கண்ணால பாடல் கேட்கும் போது தான் கஞ்சா செடியில் பூ பூக்கும் என்று தெரியும். கிராம வாழ்க்கை மிகவும் அழகாக உள்ளது. மாமனாரை எப்படி நடத்த வேண்டும் என்று நிறைய பேருக்கு தெரியாது. கொம்பன் படம் பார்த்த ஒருவர் அதன் பிறகு தான் என்னுடைய மாமனாரிடம் பேசினேன் என்றார். என்னுடைய மாமனார் என் தோளில் தொட்டு விட்டு மட்டும் போய் விடுவார்.

நான் காசு வாங்காமல் படம் பண்ணுவேன் ஆனால் சம்பளம் வாங்காமல் படம் பண்ண மாட்டேன் என்று பிரகாஷ் ராஜ் சொன்னார். ஒவ்வொரு காட்சியிலும் புதிதாக ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என சூரி யோசித்து கொண்டே இருப்பார். அமெரிக்காவில் இருந்து நான் திரும்பி வர காரணம் குடும்பம் தான். மேடையில் சூரியை கிண்டல் செய்த கார்த்தி. சூரியின் சகோதரரை பார்த்த பிறகு தான் சூரியின் உண்மையான வயது தெரிந்தது.

நிறைய கஷ்டங்களை அனுபவித்து தான் சூரி இங்கு வந்துள்ளார். வெறும் காமெடியனாக மட்டும் சூரியை நான் பார்க்கவில்லை. விடுதலை படத்திற்காக நான் காத்திருக்கேன். யுவன் உடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி. தீபாவளி என்றால் சென்னையில் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லாரும் ஊருக்கு கிளம்பி சென்று விடுவார்கள். இந்த படம் ஒரு திருவிழாவாக அனைவரும் பார்க்கும் படமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் இந்த படத்தை எடுத்துள்ளோம்.

நம்மை சுற்றி உள்ளவர்கள் நல்ல சம்பாரிக்கணும் அவர்கள் நல்ல இருக்க வேண்டும் என சூர்யா சொல்லி கொண்டே இருப்பார். ஒரு முறை வருவது வெற்றி கிடையாது. தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது தான் வெற்றி. எங்களை வாழ வைத்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் நான் மீண்டும் நன்றி சொல்கிறேன். பல இடங்களில் அம்மா தான் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். அப்பாக்கள் இருப்பதே இல்லை. அவர்கள் எங்கு இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும்.

அதிதி சொன்ன நகைச்சுவைகளை மேடையில் சொல்லி அனைவரும் சிரிக்க வைத்தார் கார்த்தி. படம் வெற்றி பெற நான் கடவுளை வேண்டி கொள்கிறேன். சிட்டிக்கு வந்தாலும் கிராமத்து ஆட்களை வைத்து முத்தையா படம் எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். படப்பிடிப்பு போது அருகில் இருந்த பள்ளியின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதை பலரின் உதவியுடன் மீண்டும் புதுப்பித்து கொடுத்துள்ளோம். பல இடங்களில் இது போன்ற தேவைகள் உள்ளது. தேவையான நிதி இருந்தாலும் அது சரியாக போய் சேரவில்லை என்றார்.

இதையும் படிங்க:'பாடலாசிரியர் சினேகன் தன்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்' - குமுறும் சின்னத்திரை நடிகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.