ETV Bharat / state

கமலின் வெற்றி... பேராண்மையுடன் நின்றதே! - actor parthiban describes mnm chief kamal haasan victory

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம தலைவர் கமல் ஹாசன் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், கமலுக்கு ஆதரவாக நடிகர் பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன்
author img

By

Published : May 2, 2021, 9:05 PM IST

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திமுக 103 இடங்களில் வென்றுள்ளது. 53 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 35 இடங்களில் முன்னிலையும், 42 இடங்களில் வெற்றியும் கண்டுள்ளது. இவ்விரு கட்சிகளைத் தவிர்த்து போட்டியிட்ட அமமுக, மநீம, நாதக உள்ளிட்ட பிற கட்சிகள் இன்னும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

தொடர்ந்து கோவை தெற்கு தொகுதியில் முன்னிலை வகித்து வந்த மநீம தலைவரும், வேட்பாளருமான கமல் ஹாசன் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். கமல் ஹாசனை விட பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துவருகிறார்.

இந்நிலையில், நடிகர் பார்த்திபன் கமல் ஹாசனுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,’திரு கமல் அவர்களின் வெற்றி என்பது.... வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல்,வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே!’எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'பணம் மட்டுமே வெற்றியை தீர்மானிப்பதில்லை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.