ETV Bharat / state

அன்று 'சவால்'... இன்று 'கதறல்'... மீரா ஆட்டத்தை அடக்கிய போலீஸ் - மீரா கைது

முடிஞ்சா கைது செய்யுனு போலீஸூக்கு சவால் விட்ட மீரா மிதுன், போலீஸூக்கு பயந்து கதறி வீடியோ வெளியிட்ட காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

Meera Mithun
Meera Mithun
author img

By

Published : Aug 14, 2021, 9:10 PM IST

Updated : Aug 14, 2021, 10:00 PM IST

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி, 8 தோட்டாக்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இருப்பினும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீரா, அவ்வப்போது எதாவது பேசி வீடியோ வெளியிட்டுக் கொண்டே இருப்பார்.

வீடியோல கெத்தாக பேசுறோமுனு நினைச்சி வாயில் வந்ததை மீரா உலறிக்கொண்டிருப்பார். அப்போ, அவர புடிச்சு ஜெயில் போடுங்க சாருன நம்ம பசங்க போட்ட மீம் கமண்ட்ஸ் இப்போ நிஜம் ஆகிருக்கு. ஆம், சர்ச்சைக்குப் பெயர் போன நடிகை மீரா மிதுன், இன்று கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

meera mithun
மீரா மிதுன்

சர்ச்சைக்கு சொந்தக்காரி மீரா

அண்மையில், பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி நடிகை மீரா மிதுன் வீடியோ வெளியிட்டிருந்தார். இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்திடப் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, அளித்த புகாரின் பேரில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

காவல் துறைக்கு சவால்

போலீசுக்கே சவால்

கடந்த 11 ஆம் தேதி அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் சைபர் கிரைம் போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், நடிகை மீரா மிதுன் ஆஜராகவில்லை. மாறாக, சமூக வலைதளத்தில் 'முடிஞ்சா என்ன கைது செய்ய பார்' எனக் காவல் துறைக்கே சவால் விட்டார்.

அதில், 'சின்ன விஷயத்துக்காக என்ன கைது செய்யனுமுனு போராடுறாங்க. நோ பிராப்ளம். காந்திஜி ஜெயில போகலையா, நேரு போகலைய. என்ன அரஸ்ட் பண்ண 5 வருஷமா போராடுறாங்க. ஆனா, என்னைய யாரும் கைது செய்திட முடியாது. அது கனவில்தான் நடக்கும்' என கூறியிருந்தார்.

கேரளாவில் பதுங்கல்

'இந்தப் பொண்ணுக்கு எவ்வளவு தைரியம், போலீசுக்கே சவால் விடுறானு' இரண்டு நாளா சமூக வலைதளத்துல ட்ரெண்டிங்கில இருந்த மீரா, இப்போ போலீஸூக்கு பயந்து ஓடிய சம்பவம் ட்ரெண்டாகியுள்ளது. இதான உன் ஏரியானு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் மீரா தங்கிருந்த இடத்துக்கே போயிட்டாங்க.

மீரா கதறல் வீடியோ

போலீஸ் வராங்கனு தெரிஞ்சதும், மீண்டும் தனது வீடியோ ஆயுதத்தை கையில் எடுத்தார் மீரா.

குத்திக்கிட்டு செத்துருவேன்

அந்த வீடியோவில், 'இவனுங்க எல்லாரும் என்னை டார்ச்சர் பண்ணுறாங்க. முதலமைச்சர் அவர்களே ஒரு பொண்ணுக்கு இப்படித்தான் டார்ச்சர் கொடுக்கணுமா? போலீஸ்னா அட்ராசிட்டி பண்ணுவீங்களா? என் போனை தர முடியாது. நான் குத்திக்கிட்டு செத்துருவேன். என் மேல ஒரு கை பட்டுச்சுன்னா என்னை கொலை பண்ணிக்கிட்டு செத்துருவேன். முதலமைச்சர் அவர்களே பிரதமர் அவர்களே இந்த தமிழ்நாடு போலீசார் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்க' என கதறி அழுதார்.

meera mithun
மீரா ஆட்டத்தை அடக்கிய போலீஸ்

தற்போது, இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இன்று கைது செய்யப்பட்ட மீரா, விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, பலரும் என்டர்டெயின்மென்ட் கொஞ்ச நாளைக்கு மிஸ் ஆகுமென்று வருத்தப்பட்டுட்டு இருக்காங்க..

இதையும் படிங்க: தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகும் நமீதா

Last Updated : Aug 14, 2021, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.