சென்னை: நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் 'தி வாரியர்' படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் இளம்நடிகர் முதன்முறையாகப் பிரபல இயக்குநர் லிங்குசாமியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இந்தப் படம், இருமொழிகளில் தயாராவதுடன், கோலிவுட்டில் ராமின் அறிமுகப் படமாகும்.
இப்படத்தில் நடிகர் ஆதி பினுஷெட்டி, இதுவரைப் பார்த்திராத வலுவான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இன்று மகா சிவராத்திரியையொட்டி 'தி வாரியர்' படக்குழு ஆதியின் ஃபர்ஸ்ட் லுக் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் ஆதி, குரு என்ற கதாபாத்திரத்தில் வில்லன் தோற்றத்தில் மிரட்டுகிறார். இயக்குநர் லிங்குசாமி தனது ஆக்ஷன் கமர்ஷியல் படங்களுக்காகப் புகழ் பெற்றவர். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் (படத்தில் விசில் மகாலட்சுமி என்று பெயர்), அக்ஷரா கவுடா ஒரு முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி, பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் 'தி வாரியர்' படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இதையும் படிங்க: வலிமையான வசூல் - திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி