ETV Bharat / state

சமூக சேவகர் கொலை வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு - killed, case

சென்னை: நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய சமூக சேவகர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
author img

By

Published : Jul 25, 2019, 8:00 PM IST

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் தணிகாச்சலம். சமூக சேவகரான இவர் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள், 2014 நவம்பர் 11ஆம் தேதி அவரை அடித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தணிக்காசலத்தின் சகோதரர் சுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில், ஆம்பூர் காவல்துறையினர் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் வெங்கடேசன் என்பவருக்கு எதிராக மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு திருப்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஏழு பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேரை காப்பாற்றும் நோக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபப்ட்டுள்ளதாகவும், முறையான விசாரணையை காவல்துறை மேற்கொள்ளவில்லை என்று கூறிய சுப்பிரமணியன், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததையடுத்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

Intro:Body:நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய சமூக சேவகர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த தணிகாச்சலம் என்ற சமூக சேவகர், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள், கடந்த 2014 நவம்பர் 11ம் தேதி அவரை அடித்து கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தணிக்காசலத்தின் சகோதரர் சுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆம்பூர் தாலுகா போலீசார் 7 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் இந்த வழக்கில் வெங்கடேசன் என்பவருக்கு எதிராக மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு திருப்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

7 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை காப்பாற்றும் நோக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபப்ட்டுள்ளதாகவும், முறையான புலன் விசாரணையை காவல்துறை நடத்தவில்லை என கூறி இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி தணிகாசலத்தின் சகோதரர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரித்தார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஒருவருக்கெதிராக மட்டுமே காவல்துறை விசாரணையை நடத்தி உள்ளது ஆவணங்களில் தெரிய வந்துள்ளதாக கூறி, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார்.

வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில், சிபிசிஐடி கூடுதல் டி ஜி பி-க்கு வழங்க வேண்டும் எனவும், டி எஸ் பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமித்து முறையாக விசாரித்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நிதிபதி உத்தரவிட்டார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.