ETV Bharat / state

'பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' - கல்வித் துறை எச்சரிக்கை! - பள்ளி வராத ஆசிரியர்கள்

சென்னை: மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

'Action will be taken against teachers who do not come to school' - Education Department warns!
பள்ளிக் கல்வித் துறை
author img

By

Published : Aug 29, 2020, 6:25 PM IST

தமிழ்நாட்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ள போதிலும் பல அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் வருவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. கடந்த 17ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதையொட்டி, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு தினசரி வருகை புரிந்து மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்தும் பொருட்டு அருகாமையில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு ஆசிரியர்கள் நேரடியாக சென்று, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலுள்ள பல அரசுப் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்ட போதிலும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வராமல் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அண்மையில் விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்விற்காக சென்றபோது இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தினசரி வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும், பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.